உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

245

தலைவர் முத்துவே. முத்தின் முத்தான தொண்டு என்ன செய்தது? தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக்க முயன்றது. முயற்சிக்குத் தக்க வாய்ப்பு உண்டாக வேண்டுமே! இரண்டு கட்டடங்களோடு இருந்த பள்ளிக்குப் புதியவையாக நான்கு கட்டடங்கள் எழுந்தன. எட்டாம் வகுப்பாகவும் வளர்ந்தது. மேலும் என்ன? உயர்நிலைப் பள்ளி ஆக்கும் முயற்சியிலே ஊன்றியுள்ளார் முத்து. கருமமே கண்ணாயினார் எடுத்த செயல் நிறைவேறித்தானே ஆகும்!

முத்துவின் பிறந்த ஊர்ப் பள்ளி வளர்ச்சி இது என்றால் ஈரோட்டில் அவர் குடியிருக்கும் சென்னியப்பர் சாலை (C.N.C. சாலை)யில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளி ஆக்கப்பட்டது. அதற்கேற்பக் கட்டடத்தை விரிவு படுத்தி யுள்ளார். அதனையும் உயர்நிலைப் பள்ளியாக்கும் முயற்சியை மேற்கொண்டு உழைக்கிறார். அதன் பெற்றோர் சங்கத்தலைவரும் அவரே ஆவர்.

66

இவ்விரண்டும் இவர் பள்ளிகளா? இல்லையே? அரசுப் பள்ளிகள் தாமே; எனினும் என்ன? ஊருணி நீர், தென்றற் காற்று, மதி ஒளி, கதிரொளி, மழைப்பொழிவு, தண்ணீர்ப் பந்தல், சாலை வழி என்பவை எப்படிப் பொதுவானவையோ அப்படியே அறிவாளன் செல்வமும் பொதுவானது என்பது ஒரு தனிப்பாடல் செய்தியாகும்.

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

""

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கட் படின்

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்’”

“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு

என்னாற்றுங் கொல்லோ உலகு"

என்னும் ஒப்புரவுக் குறள்மணிகள் வெளியிடும் உண்மை

தானே?

கொங்கு வேளாளர் சங்கம்

து

வள்ளுவர் வழியும் வள்ளலார் வழியும் உலகளாவிய உயிரளாவிய விரிந்த பார்வையின. சாதி சமய மொழி இனக்