உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

கட்டுகள் அற்ற விரிவுடையன. ஆன்ம நேய ஒருமைப்பாட்டைப் போற்றி வருவன. அதனால் சாதி சமயம் முதலிய குறுகிய பார்வையைக் கொள்ளா. எனினும் தம் குடும்பத்தை உயர்த்து வதற்கு உழைப்பது போலக் குல உழைப்புக்கும், சுற்றத்தார் சுற்றப்பட வாழும் வாழ்வுக்கும் இவ்விரி நிலை தடையாவது

ல்லை.

தன் சாதி, தன் சமயம் என்பவற்றின் வாழ்வே வாழ் வென்றும் பிறசாதி சமயங்களைக் கெடுத்தும் அழித்தும் கூடத் தன் சாதியும் சமயமும் வாழவேண்டும் என்று வெறி கொண்டும் ஆடும் ஆட்டமே சால்பு அற்றதும் கேடானதும் ஆகும்.

தொண்டர் முத்து, நகர முதன்மை மாந்தர் முத்து தம் குடிப்பெரு மக்களுக்கும் உரிமை அன்பு உடையவரே. ஆதலால் கொங்கு வேளாளர் மாவட்டத் தலைவராகவும் விளங்குகிறார். தம் சாதி அளவில் நில்லாத பொது மாந்தராக அவர் இருப்பினும் தாம் பிறந்த சாதிக்குரிய முறையான கடமை புரிவதிலும் அவர் பங்கு கொண்டிருப்பதும் எவ்விடத்தும் எவரிடத்தும் சாதி வெறி காட்டாதவராக இருப்பதும் பிறர் பிறர்க்குச் சிறந்த எடுத்துக் காட்டேயாம்.

வண்மைச் சிறப்பு

இனி இவர் தம் வள்ளன்மைப் பேற்றையேனும் எவரேனும் முற்றாக அறிவரா? பழுத்த மரம். "நான் இவர்க்குக் கொடுத்தேன்; இவ்வளவு கொடுத்தேன்; என்று சொல்லுமா? "போன பருவத்தில் தந்தேன்; இந்தப் பருவத்தில் தரமாட்டேன்" என்னுமா! அப்படியே முத்துவின் கொடையும் அமையும். "பிறர் பிறர் கூறக் கேட்டேன்" என்ற வன்பரணர் போன்ற நிலைக்கே நாம் ஆட்பட நேரும்.

ஆனால் கொடைக்கென ஒரு தனிச் சிறப்பு உண்டே? “ஓங்கி அடிக்கப்படும் முரசின் ஒலிகூட ஒரு காதத் தொலைவுக்கே (10 கல்) கேட்கும்! ஆனால் கொடுத்தார் என்னப்படும் சொல் அடுக்கிய மூவுலகும் கேட்கும் என்றது நாலடி.

மூவிடம் மட்டுமா கேட்கும்! முக்காலமும் கொடைப் பெருமை பேசவேபடும்.

கொடையிலும் சோம்பராக்கும் கொடை உண்டு. பிச்சையால் வயிறு வளர்க்க வாய்ப்பு உண்டு என்றால் அவர் வேலை செய்வாரா? உழைப்பை ஒழிக்கும் கொடை நாட்டுக்குக் கேடாவதே