உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

247

ஆகும். ஆனால் பொது நலப்பணிக்கு உதவும் கொடை உள்ளதே அது கேடற்றது, பயன்மிக்கதும் ஆகும்.

உடற்குறையர் நிலையம்

குப்பு அவர்களின் கொடை பொதுப்பயன் மிக்கதாம். செவிக்குறை பேச்சுக்குறைப் பிள்ளைகளையும் பார்வை இழந்த குழந்தைகளையும் ஒருவர் தம் குடிசையில் வைத்துப் பேணி வருவதை அறிந்தார் முத்து. அவர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார். அவர் பெயர் முனுசாமி. அவரிடம் தம்மை அறிமுகப் படுத்தாமல் பொது நிலையில் உரையாடினார்.

உடல் ஊனமுற்றோர் படும்பாட்டை உணர்ந்து அவர்கள் நலம் கருதி அத்தகையவர்களை அழைத்து வைத்துப் பேணி வருவதாகக் கூறினார் முனுசாமி.

அரசின் உதவி உண்டா? பொது மக்கள் உதவி உண்டா? என்று கேட்டறிந்தார். முனுசாமியின் பொருள் நிலை என்ன என்பதையும் கேட்டறிந்தார். தம் நெஞ்சத்தின் நேய உருக்கமே கைப்பொருளும் மெய்ப்பொருளுமாக முனுசாமியார் தொடங்கிய தொண்டினை எண்ணி உருகினார் முத்து.

முனுசாமியாரிடம், பொதுமக்கள் செல்வர்கள் உதவியை நாடிச் செல்லக் கூடாதா? இப்படியொரு விடுதி இருப்பதாகத் தற்செயலாக முதல் நாள் கேட்டறிந்தே தாம் நேரில் வந்ததாகக் கூறினார். முனுசாமியார் செல்வர்களையும் தொழில் தோன்றல் களையும் தேடித் தேடி அலைந்து ஏறி இறங்கி வந்ததையும் அனைவரும் கை விரித்ததையும் வருந்தி உரைத்தார். பெருந்துறைப் பகுதியில் ஆனைப்பாரி மேட்டில் அரசு நிலம் தந்ததை உரைத்தார். அதில் ஒரு சிறு கட்டடம் கட்டத்தாம் விரும்பு வதையும் உரைத்தார்.

அவர் நிலையையும் அவரிருக்கும் குடிசையின் நிலைமை யையும் ஊனர்களின் நிலையையும் உணர்ந்த முத்து உடனே தாம் 10000 உரூபா தருவதாகக் கூறிக் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யத் தூண்டினார். இப்பொழுது அத்தொண்டு நிறுவனம் வாய்ப்பான கட்டடத்தோடும், ஊனர் தொகைப் பெருக்கத் தோடு அரசு பெருமக்கள் உதவியோடும் சீராக நடைபெற்று வருகிறது. எனினும் அதன் வளர்ச்சிக்கு முதலும் முதன்மையுமாக நின்றவர் முத்துதாமே! அதனால் அவர் தம் கொடைத்திறம் ஆங்குக் கல்வெட்டாகிக் கவின் செய்கின்றதாம்!