உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நீரில் எழுதிய எழுத்துப் போன்ற நிலையற்ற வாழ்வை நிலைபேறாம் கல்லெழுத்து வாழ்வாக்கிய முத்து "மன்னா உலகத்து மன்னுதல். கலையை நன்குணர்ந்த பெருமகனார். ஆனால். ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது ஊதியமில்லை உயிர்க்கு" என்னும் உயிரூதியம் கண்டுவிட்ட முத்துவுக்கு இது ஒன்றுதானா புகழ் வரவு?

மனவளர்ச்சி குறைந்தோர் நிலையம்

கற்றோர் எண்ணிக்கை பெருகுகின்றது. பொருள் வளமும் உயர்கின்றது. மருத்துவ நலமும் விரிகின்றது. அறிவியல் பொறியியல் சிறக்கின்றன. ஆயினும் என்ன? நோயர் பெருகுகின்றனர். மனநோயரோ மிகப்பெருகுகின்றனர். மனவளர்ச்சி இல்லாப் பிறப்புகளும் பெருகுகின்றன. இதன் காரணம் என்ன?

நோய் தீர்க்கும் முயற்சி போலவே நோயாக்கும் போக்கு களும் போட்டி போட்டு ஒன்றை ஒன்று வெற்றி கொள்ளும் நிலையில் பெருக்க முறுகின்றன என்பதே பொருளாம். வறுமை நாடுகளில் மட்டுமன்று; வளர்ந்த நாடுகளும் இந்த நெருக்கடியில் இருந்து விலக்காகி விடமுடியவில்லை. நோயைத் தீர்க்கும் மருந்தே, நோயாக்கும் மருந்தாகவும் இருக்கும் நிலைமையே இஃதாகும். இந்நிலை உலக நலமாக அமைய முடியாது. இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் வேறு கேடு வேண்டாமலே உலகம் விரைவில் மனநோயரும் மனவளர்ச்சி இல்லாரும் நீக்கமற நிறையும் காட்சியையே காண நேரும்.

மனவளர்ச்சியற்றவர்களைப் பேணிக் காத்து மனவளர்ச்சி பெறுவிக்கும் நிலையம் ஒன்று ஈரோட்டில் இருத்தலை அறிந்தார் முத்து. அந்நிறுவனத்திற்கு மனையிடமும் தேவைப்பட்டது. கட்டடமும் வேண்டியிருந்தது. முத்து, மனையிடம் பத்துச் செண்டு வாங்கி வழங்கினார். கட்டடத்திற்கு உருபா 25000 வழங்கினார். அந்நிலையம் மனவளர்ச்சி குறைந்த 120 பேர்க்கு மேல் கொண்ட சமுதாயத் தொண்டு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது.

பதினகப் பள்ளிகள்

முத்து அவர்களின் கொடைவளம் பெற்றுச் சிறந்து வரும் பதினகப் பள்ளிகள் (Metriculation School) பலவாம். அவற்றின் கட்டடப் பணிக்காகப் பொருள் வழங்கியுள்ளார். ஒரு வகுப்பறை