உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

ஆனால் நல்லவரும் வல்லவரும் ஆகியவரும், நற்றமிழ் அன்பும் தொண்டு நலமும் கொண்டவரும் ஆகிய முத்து இவ்வீடுபாடு கொண்டது இயல்பே ஆகும். அவரே கல்விக் கண்ணொளி தருவதற்கு எப்படி எப்படிக் கொட்டிக் கொட்டி கொடை நலம் புரிகிறார்.

கொங்குக் கல்லூரி

ஈரோட்டிலே திண்டல் பகுதியில் கொங்கு வேளாளர் கல்லூரி ஒன்றுள்ளது. புகழ்மிக்க அக்கல்லூரி இயக்குநர்களுள் ஒருவராகக் குப்பு உள்ளார். அக்கல்லூரியில் அறை ஒன்று கட்ட உரூபா 25000 வழங்கியுள்ளார். பிறவகைக் கொடையாகப் பன்னீராயிரம் வழங்கியுள்ளார். அதன் வளர்ச்சிக்காக மிக அக்கறையும் காட்டுகிறார். இவை ஓரளவில் அறியவந்தவை. இன்னும் தருவதற்காக உறுதிமொழி தந்துள்ள கல்விக் கொடைத்

டங்களும் உண்டு. அவை அறக்கட்டளை வாய்ப்பைக் கருதிச் செய்யக் காத்திருக்கும் பட்டியலில் உள்ளவை. ஆனால் தேவை என்று வந்துவிட்டால் எவ்வகையிலும் தேடித்தருவதை நோக்காகக் கொண்டவர்க்கு வைப்புத் தொகை அளவு, ஓர் அளவாகுமா?

தவப் பெரும் வேதாத்திரியார்

மெய்யுணர்வுக் கொள்கையிலும் இறைமை நாட்டத்திலும் அக்கறை கொண்டவர் முத்து. அதே பொழுதில் பகுத்தறிவுக் கொள்கைப்பற்றும் சீர்திருத்த நோக்கும் உடையவர். அவர்க்குத் தவத்திரு வேதாத்திரி அடிகள்மேல் பற்றுமை மிகுதியாம். அது கொள்கை வழியால் ஏற்பட்ட பற்றுமை என்பது நெருங்கிக் கண்டவர்க்கு நன்கு புலப்படும்.

"5"

எவரையேனும் காணும்போது "வாழ்க வளத்துடன் க என்று முகமலர்ந்து வாயினிக்கக் கூறும் சொல் நமக்கு வேதாத் திரியாரை நினைவூட்டத் தவறாது. மேலும் இயற்கை உணவு, மூச்சுப்பயிற்சி (யோகா) கூட்டு வழிபாடு முதலியவை அவர் வழியில் இவர் பெற்றவையாம்.

வேதாத்திரியார்க்கு ஆழியாற்றில் அறிவுத் திருக்கோயில் ஒன்றுண்டு. இயற்கைச் சூழலில் வனப்புற அமைந்துள்ள அக் கோயில், உள்ளம் கொள்ளை கொள்ளும் சீர்மையுடையது. கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பும் "கைபுனைந்தியற்றிய