உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

251

எழில் வனப்பும்' இணைந்து கைகோத்து நிற்கும் அந்நிலையம் உருவாக்கம் பெறும்போது முத்துவின் உள்ளம் பங்கு கொள்ளாமல் அமையுமோ? அத்திருப்பணிக்கு உரூபா 25000 வழங்கியுள்ளார்.

கொடைக்காக மட்டுமா வேதாத்திரியார்! கொள்கை யிலும் உறுதியாக நிற்கிறார். உடலோம்பல், உளமோம்பல், உயிரோம்பல் ஆகியவற்றை முறையாகச் செய்கின்றார். உடற் பயிற்சி ஒருமுக உன்ளுகைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி என்பவற்றை ஒவ்வொரு நாளும் தவறாது செய்து வருகிறார். அப்பயிற்சிகளை முறையாகப் பெற்றுத் திறமாகச் செய்வதைப் பிறர்க்கு வலியுறுத்தும் அவர் தாமே எடுத்துக் காட்டாகச் செயற்பட்டு வருகிறார் வாய்ச்சொல் வீரமா வீரம்?

இயற்கைக் காவலர்

கோவை மாநகர்க்குப் பலப்பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் புத்தம் புதிய பலரும் போற்றும் இயற்கைச் சிறப்பு ஒன்றும் வாய்த்துள்ளது. அது கோவை 6, கணபதி என்னும் பகுதியில் அமைந்துள்ளது.

திருத்தகு தோன்றல் கிருட்டிணசாமி அவர்கள் மிகப் பெரும் பரப்பளவில் புத்தம் புதிய வாய்ப்பு நலங்களுடன் நிறுவியுள்ள இயற்கை நல மருத்துவமனையே அச்சிறப்பு மிக்க நிலையமாகும்.

'

இந்நிலையத்தின் அமைப்பையும் சிறப்பையும் அறிந்தார் முத்து. நேரே சென்றார். அதன் நலங்களையெல்லாம் உணர்ந்தார். உணவே மருந்து மருந்தே உணவு" என்னும் அடிப்படைக் கொள்கையில் தோய்ந்தார். அவர் உள்ளுள் ஓர் ஒளி தோன்றியது. உடல் உள்ளம் எல்லாம் நலம்பெற வாய்க்கும் இத்திட்டம் இயற்கைப் பாதுகாப்பும் மாசுக் கட்டுப்பாடும் அமைந்து சிறப்பதைப் போற்றினார். தாமும் இயற்கை நல நிலையம் ஒன்றைக் காண விரும்பினார்.

இயற்கை மருத்துவப் பயிற்சியில் தேர்ந்த ஒருவர் வேண்டுமே. மருத்துவர் திரு ஆறுசாமி பெரியவர் எண்ணத்தில் தோன்றினார். இருவரும் திட்டமிட்டனர். குறளாயத் தோன்றல் வேலாவைக் கண்டு கலந்துரையாடினார். ஆக்கமானவற்றுக்கு எல்லாம் ஊக்கமாக முன் வந்துதவும் வேலா உடனே உவந்து ஏற்றார்.