உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

"தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேல் என்று நான் எத்தனை முறை வகுப்பில் சொல்லியிருக்கிறேன்!

"குற்றத்திற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொண்டாய்

போகலாம்.'

19

இத்தலைமையாசிரியர் பெருந்தலைவர் காமராசரின் ஒன்றுவிட்ட தங்கை மகனார் சண்முகனார் என்பார். அவ்விளைய மாணவர் வேலா அரச மாணிக்கனார்!

இது!

1990இல் காணும் வீறு, 1952 இல் அரும்பியதன் சான்று

முந்தையோர் :

ஆந்திர நாட்டுத் திருப்பருப்பதத்தில் (ஸ்ரீசைலத்தில்) இருந்து வெளியேறிய வீரசைவக் குடும்பத்தவர் (இலிங்காயதர்) கும்பகோணம், மதுரை, காஞ்சி, திருப்பரங்குன்றம், சென்னை, சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, புதுவை முதலிய இடங்களுக்கு வந்தனர். அவர்கள் முதற்கண் வந்து அமைந்ததும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம் பெருமையுடையதும் கும்பகோணம் மடம் என்பர். அது இன்றும் 'பெரிய மடம்' என்னும் பெயரா லேயே வழங்கப்படுகிறது. இங்கு வந்த வீரசைவர்கள் சங்கமர் எனப்படுவர். 'சங்கமர்' என்பார் 'சமயப்பரப்புநர்' கும்பகோணம் மடமும், அதனைச் சார்ந்த வீரபத்திரர் கோயிலும் சோழ

மன்னர்களால் கட்டப்பட்டவை என்பர்.

சங்கமர் சென்னை முதல்கன்னி வரை வெவ்வேறு பெருநகர்களிலும் சிற்றூர்களிலும் பரவினர். 50, 100 வீடுகள் சேர்ந்த குடியிருப்பும் உண்டு. 4,5 குடிகள் தங்கிய ஊர்களும் உண்டு. அவர்களுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் கொண்டு கொடுத்தல் உறவு கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் சா ாதி வகையில் ஒருமைப்பட்டமை போலவே, தமிழ் மொழி வகையிலும் பெரும்பாலும் தமிழராகவே ஆகிவிட்டனர். புதிதாக வீரசைவ நெறியை ஏற்றுக் கொண்டவர்கள் எனினும் அவர்களைத் தனித்துப் பார்க்கும் பார்வை விடுத்தனர்.

வீரசைவக் குடும்பங்களுள் சில நாமகிரிப் பேட்டை, ஈரோடு -அவினாசி சாலையிலுள்ள பள்ளகவுண்டன் பாளையம், பவானி,