உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

33

சேலம் ஆகிய இடங்களுக்குச் சென்று உப்பு, பருப்பு வாணிகமும், சமுக்காள நெசவும் செய்து வாழ்ந்தனர். வேலாவின் ஓட்டனார் பள்ளகவுண்டன் பாளையத்தில் இருந்தவர். வேலாவின் பாட்டனார் காலத்தில்: மொடக்குறிச்சி விளக்கேத்தியைச் சார்ந்த திட்டுக்காட்டூரில் தங்கினர். தாத்தா பாட்டனார்) அர்த்தநாரி என்பார். அவர் பிறப்பியம் எழுதுவதிலும், கணியம் கூறவதிலும் தேர்ச்சி மிக்கவர்.

ஊர்ப் பெரிய கவுண்டர் 'இன்ன நாளில் இறந்து விடுவார்' என்று கணியர் சிலர் உறுதியாகக் கூறினர். அர்த்தநாரியார், "இறப்பு இல்லை; உறுப்புக் குறை உண்டு" என்றார், அதன்படி கால்கை இயக்கக் குறை ஏற்பட்டது. இறப்பு இல்லாது ஒழிந்தது. அதனால் அவர் வாழ்ந்த காலமெல்லாம் வீட்டுக்கு வேண்டும். நெல் வழங்க நிலம் ஒதுக்கினார் பெரிய கவுண்டர்.

அர்த்த நாரியார் கணியத்தில் வல்லார் எனினும் அதனைக் காசாக்கக் கருதினார் அல்லர். உப்பு பருப்பு அரை செலவு (சில்லறைச்செலவு)ப் பொருள் வணிகமே செய்தார். உப்பு, உள்ளூர் விளைவன்று; கடல் விளைவு; பருப்பு, ஆந்திர நாட்டில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது; ஆதலால். உள்ளூர்ப் போட்டியில்லாத வணிகத்திலே சங்கமர் ஈடுபட்டி ருந்தனர். ஆகலின் அர்த்த நாரியாரும் அவ்வழியே மேற்கொண் டார். பட்டுச் சமுக்காளம் நெய்யும் நேர்த்தியால் 'சமுக்காள சங்கமர்' என்னும் பெயரும் உண்டு. இத்தெழிலும் அர்த்த நாரியார் சார்ந்த பல குடும்பத்தவர் மேற்கொண்டதேயாம். அர்த்த நாரியாரின் துணைவியார் இலிங்கம்மாள் என்பார் பவானியில் பிறந்தவர்.

தந்தையார் :

அர்த்த நாரியார் - இலிங்கம்மாள், இல்வாழ்வுப் பயனாக மக்கள் எழுவர் தோன்றினர். மகளிர் இருவர்; ஆடவர் ஐவர். இவருள் நான்காம் மகனாகப் பிறந்தவர் வேலாயுதம் எனப்படும் வேலாயுதனார்! வேலா அரச மாணிக்கனாரின் தந்தையார்! இவர் பிறந்த நாள் 6-10-1904.

வேலாயுதனார் பள்ளிப் படிப்புப் படித்த அளவில் தந்தையாருடன் வணிகம் செய்ய வேண்டியவரானார். உப்பும் பருப்பும் கொண்டு ஏழுநாள்களுக்கும் ஏழு ஊர்களில் நடை