உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பெறும் சந்தைகளுக்குச் சென்று வாணிகம் செய்வர். ஒருநாள் இவர்கள் கடைக்குப் பக்கத்திலே, கும்மி அம்மானை ஒப்பாரி தாலாட்டு முதலாய சிறுசிறு நூல்களையும், விக்கிரமாதித்தன் கதை, அல்லியரசாணிமாலை முதலான பெரிய எழுத்து நூல்களையும் பரப்பி வைத்து வணிகம் செய்து வந்த பெரியவர் ஒருவர் அர்த்தநாரியாரிடம் "எனக்கு முடியவில்லை; இந்த நூல்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு தொகை தாருங்கள்" என்று அவற்றை வைத்திருந்த, பெட்டியுடன் ஒப்ப டைத்தார்.அர்த்தநாரியார் தம் வணிகத்திற்றுத் துணை வேண்டு மென்று பள்ளிப் பருவத்திலேயே தம்மகனை ஈடுபடுத்தியிருக்கும் இக்கட்டான சூழலில், 'இரட்டை வணிகமா?' எனத் திகைப்போடு எண்ணினார். ஆனால், பெரியவர் நிலையும், அவர் சொல்லும் - அர்த்த நாரியாரை இளக்கின. ஒரு தொகையைத் தந்து அப்படியே எடுத்துக் கொண்டனர். என்ன செய்வது?

நூல்களைக் கட்டி வைப்பதா? கட்டி வைத்தால் விற்க வகை என்ன? ஒரு நொடியில் முடிவுக்கு வந்தார்!

"வேலாயுதம் நூல்களை நீ பார்த்துக் கொள்; நான் இதனைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

ஒரு கடை இரு கடை :

வேலாயுதம் தனிக்கடை வணிகரானார்; பின்னே தோன்ற இருக்கும் தோற்றங்களுக்கெல்லாம் அந்த நொடிப் பொழுதே அவர்க்கு மூலமும் முதல் வைப்பும் ஆயிற்று! "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதை நூல் வணிகராகப் புகுந்த அப்பொழுதிலேயே புலப்படுத்தி விட்டார்! எப்படி?

வேலாயுதனார்க்கு நல்ல குரல் வளம் உண்டு! எவரும் விரும்பிக் கேட்கப் பாடுவார்! நூல்கள் சூழப்பரவிக் கிடக்க, அதன் சூழலில் மலர்க் குவியல் இடையே புகுந்து இசை மிழற்றும் தும்பியாய் - சுரும்பாய் - தேனீ யாய் மாறினார். தும்பிசேர் கீரனார் என்னும் சங்கப் புலவர் பெயரை மெய்ப்பிப்பார் போலாயினார் வேலாயுதனார்!

வகைக்கு ஒரு நூலாக எடுத்துக்கொண்டு, சந்தையர் எல்லாரும் தம்பால் திரும்பிக் கேட்கும் அளவில் இசை எழுப்பிப் பாடினார்! "புல்லாங்குழல்" ஒன்று, குழந்தை வடிவில் நின்று இசைக்கும் இசையென மயக்கிய இசைக்கு மயங்கியவர், தம்மை