உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

35

மறந்து பாடலில் ஊன்றினர். படிக்கத் தெரிந்தவர்கள், கையில் வைத்துப் பாடும் நூலைக் காசு தந்து பெற்றனர்; இளைஞர்கள் வடி வந்ததும், தேடி வந்தும் பாடல் கேட்டனர். மகளிர்கூட்டம் மூக்கில் விரல் வைத்து நோக்கியது! அர்த்தநாரியார் எண்ணியும் பாராத விந்தை அன்றைச் சந்தையில் நிகழ்ந்து விட்டது! சந்தை இடந்தோறும், சந்தை நாள் தோறும் தந்தையும் மைந்தரும் 'இரட்டைக் கிளவி' யெனப் பிரிதலின்றி வணிகம் செய்தனர்! பள்ளியில் பயிலாக் கல்வியை அறிஞர் 'சாக்ரடீசர்' போலச் சந்தையிலே பெற்றும் பரப்பியும் வந்தார், இளைஞர் வேலாயுதனார்!

.

பெரியவரிடம் விலைக்குப் பெற்ற நூல்கள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்! புது நூல்கள் விற்பனைக்கு வேண்டுமே! திருச்சிக்கும் மதுரைக்கும் சென்னைக்கும் சென்று நூல்களைச் சிப்பம் சிப்பமாகக் கொணர்ந்தனர் நம்பிக்கையூட்டியது அந்த நல்ல வணிகம்.

நூல் புகுந்த இடத்தில் செம்மை புகும்! எப்படி? மரத்தை நேராக்க கல்லை நேராக்க சுவரை ஒழுங்காக்க -நூல் உதவுதலை நேரில் காணலாமே! நூல் வணிகம் போலும் மேல் வணிகம் உண்டா? கல்விக் கண்ணொளி மட்டும் தான நூல் தருகிறது! உள்ளொளி ஊற்றுக்கண்ணும் நூலேயன்றோ! ஒரு கல்விக் கூடம் திறந்தால் ஒரு சிறைக் கூடம் அடைபடும் என்பர். அக் கல்விக்கூட மூலப் பொருள் உருவாக்கம் ஆகும் நூலின் மதிப்பை அதன் மங்கலம் என்னும் பொருளே விளக்கும்! பொருள் தேடும் வழிகள் பலப்பல கண்கூடாக இருந்தும் உலகுக்கு ஒளியூட்டும் நூல்வணிகத்தில் ஈடுபடுமாறு ஆட்படுத்திய பெரியவர் நூல்களை விற்றுச் சென்ற பெரியவர்-மெய்யாகப் பெரியவரே! அவர் செயன்மைச் சீர்மை எப்படியெல்லாம் விரிவதாயிற்று!

-

கூடிவந்த வேலை :

ஒரு நாள் சென்னிமலையை அடுத்த சிவகிரியிலே சந்தை! இளைஞர் வேலாயுதம் குயிலெனக் கூவியிசைக்கிறார்! அவ ரொத்த இளைஞர் ஒருவர் தம் செவியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேட்கிறார். கேட்டுக் கேட்டுக் கிளு கிளுப்பும் கிறுகிறுப்பும் அடைகிறார்! இந்த இளைஞரின் குரல் மட்டும்