உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

எனக்கிருந்தால் எப்படி இருக்கும்! இப்பொழுதும் என்ன? இந்த ளைஞரையே கேட்டு விடலாமே!

"நீங்கள் பாடும் பாட்டுகளைப்போல் நிறைய இயற்றி இருக்கிறேன்; இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் இயற்றித் தருவேன்; இந்தப் பாட்டோடு சேர்த்துப் பாடுகிறீர்களா?"

"தாராளமாகப் பாடுவேன்."

“சந்தைக்கு வந்த இளைஞன் தன்னை மறந்து பூரித்தான். என்பாட்டையும் இவன் இப்படி இசையோடு பாடுவானா! கேட்கக் கேட்க எப்படி இருக்கும்!" தன்னுள் எண்ணினான். அடுத்த சந்தையில் ளைஞர் இருவரும் சந்தித்தனர். அச்சந்திப்பு வாணாள் அளவும் தொடரும் சந்திப்பு ஆயிற்று! அச்சந்திப்பே இராவண காவியக் குழந்தையார் சந்திப்பும் சிவலிங்க நூற்பதிப்புக் கழக வேலாயுதனார் சந்திப்பும் ஆயிற்று! எண்ணிப் பார்க்கும் வாழ்வில், எண்ணாத விந்தைகள் எத்தனை எத்தனை!

நிலையம் கோலல் :

வேலாயுதனார் வளர்ந்தார்! தந்தை அர்த்த நாரியார் தம் முதுமையால் தளர்ந்தார்! உப்பு பருப்பு, வணிகம் சுருங்கிற்று; பொத்தக வணிகம் பெருகிற்று; வேலாயுதம் பொத்தகங்கள், சந்தையைத் தேடாமல் நகரத் தெருப்பார்வையைச் சந்திக்க அவாவின! பொத்தக நிலையமாகும் நாளை எதிர் நோக்கின!

எண்ணுவதெல்லாம் எய்துதல் எளிதா? எல்லார்க்கும் எளிதா?"எண்ணிய எண்ணியாங்கு, திண்ணியர் எய்துவர் என்பது வள்ளுவம்! திண்ணிய எண்ணமுடைய வேலாயுதனாரின் நெஞ்சில் இருப்பதை எப்படி அர்த்தநாரியார் அறிவார்? அவர்தாம் வேலாயுதரைத் 'தந்தவர்' அல்லரோ! தேர்ந்த கணியரும் அல்லரோ! அவர் கூறினார்: என் காலத்திற்குப் பின்னால்எவரும் இத்திட்டுக்காட்டூரில் இருத்தல் கூடாது. பங்காளிச் சண்டையும்பிணக்கும் பிளவும்கொண்ட இவ்வூர் வாழ்வு என் குடும்பத்துக்குத் தொடர்தலைச் சிறிதும் விரும்பேன்; நிலமும் வீடும் விற்றுத் தருகிறேன்; எங்குச் சென்றும் பிழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், என் காலம் இத்திட்டுக்காட்டிலே தான்' என்றார்.