உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

37

குடிபெயர்தல்' போன்றதாயினும் மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவரைப் பிரிதல் கருதியே வருந்தினர். எனினும், அணிந்துள்ள ஊர்களில் தங்கி அடிக்கடி பார்த்துக் கொள் ளலாம் என உறுதி கொண்டனர். வேலாயுதனார் எண்ணம் ஈரோட்டை நாடியது. நேதாசி வீதியில் கடையமைந்தது! வாடகைக் கடையே அது. வாழ்க்கைச் சிறப்பை வழங்கிய தலைக்கடை அதுவாயிற்று.வேலாயுதனார் 'நாநயமானவர்; நாணயமுமானவர்; கடையின் வளத்திற்குத் தலையாயவை இவை! ஆதலால், நம்பிக்கை மிக்க வணிகராக வேலாயுதனார் இளமையிலேயே விளங்கினார். பேரேடு சிட்டை குறிப்பு இன்னவும் பிறவும் பொத்தகத்தொடு சேர்ந்து விரிந்தன.

பாட்டி வழி முறையும்; பாட்டனார் வழிமுறையும் :

பாட்டியின் வகையினர் பவானியில் வாழ்ந்தனர். அவர்கள் நல்ல வளமுடையவர்கள்; வணிகம், சந்தை ஒப்பந்தம் ஆகிய வற்றிலும் சிறந்து விளங்கியவர்கள். ஆதலால், வேலாயுதனார் உடன் பிறந்தார், கொண்டு கொடுப்பு பாட்டியின் வழியையே சார்பதாயிற்று. பாட்டனார் வழியையே சார்வதாயிற்று. பாட்டனார் வழியினர் திருப்பூரையடுத்த குன்னத்தூரில்

ருந்தனர் அவர்கள் வறுமையராய் இருந்தனர். பாட்டனாரின் தங்கை மகள் வெங்கட்டம்மாள் என்பார். அவரைத் தம்மகன் வேலாயுதத்தின் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள அர்த்த நாரியார் விரும்பினார்! உள்ள நிறைவு வெள்ளமெனப் பாயுமானால் செல்வமென்ன? வறுமை என்ன? "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்று தெளிந்த மனத்திற்கு என்ன குறைதோன்றும்! வேலாயுதனார்க்கு அப்பொழுது அகவை பதினெட்டு!

முகவர்:

வேலாயுதனார் முயற்சி கடையளவில் அமையவில்லை. விரிந்தது; தினமணி, எக்சுபிரசு (விரைவான்) முதலிய இதழ் களுக்கு முகவராகக் கடமை புரிந்தார்.

பதிப்பகம் :

சந்தையில் சந்தித்துச் சிந்தையில் இடம் கொண்ட புலவர் குழந்தை எழுதிய இசைப்பாடல்களை அச்சிட்டார். ஈரோடு வந்தபின் சிவலிங்க நூற்பதிப்புக் கழகம் என்னும் பதிப்பகத்தைத்