உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தொடங்கினார். பாட நூல்களும் துணை நூல்களும் உரை நூல்களும் வாய்பாடு தேசப் படம் முதலியனவும் வெளியிட்டார். புலவர்கள் அரங்கம் :

பொத்தகக் கடை - நூல் வெளியீடு என்பன எவ்வளவு நெருக்கமாக வேலாயுதனார் நெஞ்சில் இடங் கொண்டனவோ அவ்வளவு இடங் கொண்டது தமிழ்ப் புலவர்கள் தொடர்பு. ஒவ்வொரு நாள் மாலையும் பொத்தகக் கடை, புலவர்கள் அவைக் களமாகவே திகழ்ந்தது.

செங்குந்தர் உயர்பள்ளித் தமிழாசிரியர் சிவ.குப்புசாமியார், ஈரோடு ஆசிரியர் சிவ சங்கரனார், புலவர் குழந்தையார், புலவர் ஆறுமுகனார், கோவை சுந்தரராசனார், முனைவர் சி. இலக்குவனார், தெய்வ சிகாமணியார், கரு. காசி, ஈரோடு கலைமகள் பள்ளித்தாள்ளார் மீனாட்சிசந்தரனார் சிக்கையா கியோர் அரங்கமாகச் சிவலிங்க நூற்பதிப்புக் கழகமும் விற்பனையகமும் திகழ்ந்தன. அந்த நெருக்கம் நூல் வெளியீட்டால் உண்டாயது என்பதனினும், ஒரு குடும்ப உறவாக விளங்கிய இன்ப அன்பால் உண்டாயது என்பது தகும்.

வேலாயுதனார் பொங்கல் கொண்டாடுவார்; பொங்கலுக்குப் புலவர் பெருமக்களையெல்லாம் அழைத்துப் பூரிப்பார்; சீர்செய்து பாராட்டுவார்; எப்புலவர்க்கேனும் இடர்! பொருள் முடை! கேட்டது கேட்டபடி தருவார்! கேளாமல், தாமே கேட்டும் தருவார்! கணக்குப் பார்த்துக் கடன் பார்த்துத் தரும்மரபைப் போற்றினார் அல்லர்! தக்கபோதில் உதவும் தாதாவாகத் திகழும் ஒருவரைத் தேடித் தேடிப் புலவர்கள், தம் வணிக நிலையமென உணர்ந்து போற்ற மாட்டார்களா! அதனால், பாடநூல்கள் பல வெளிப்பட்டன. பாடமாக விளங்கின. பணத்தையும் தேடித் தந்தன. அதன் விளைவு பிறிதொரு நலத்தைத் தந்தது! வினையால் வினையாய விழுப்ப விளைவு அது.

நூல் வெளியீடு :

பாடநூல்களின் வருவாய் சமய நூல்களை வெளியிட உதவிற்று. விலையாகும் நூல் வளத்தால்தானே, விலை போகா நூல்களை வெளியிட்டு அந்நூல்களைக் காக்கவும்பரப்பவும் முடியும்! முன்னதன் வளமின்றேல், பின்னதன்விளைவு அரிதாகி விடுமே!