உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை நலம் :

ஈரோடு வேலா (வரலாறு)

39

நல்லுள்ளமுள்ளோர் பெறும் நலம்,நாட்டு நலமாம்! அதுவே உள்ளூர்ப் பழுத்த பயன் மரமுமாம்! வேலாயுதனார் செல்வத்தில் ஓரளவு பெருகி வருங்காலத்திலேயே, அவ்வரு வாயின் ஒரு பகுதியை ஏழை எளிய மாணவர்களுக்குக் கற்பலகை குறிப்பேடு, புத்தகம் முதலியன வழங்குதற்கும் கல்விக் கட்டணம் கட்டுதற்கும் செலவிட்டுள்ளமையை எண்ணினால் நல்வணிகர் கடமைஇனிது விளங்கும். கோடைக்காலத்தில் மோர்ப்பந்தல் அமைத்தலைக் கடனாகக் கொண்ட செயலால், அவர்தம் பொதுப்பணி ஈடுபாடு விளங்கும்.

திருவளர்கை :

வேலாயுதனார்க்கு இன்னொரு தனிப் பெருமை; அது காலமெல்லாம் பெருகி வந்த பெருமை! "அவர் கையில் இருந்து வாழ்த்துடன் பேரேடு சிட்டைகளைப் பெற்றுப் புதுக்கணக்குப் போட வேண்டும்" என்பதாம். கைராசிக்காரர் கடை எனப் பெயர் பெற்று விட்டமையால் அதுவே வணிகத்திற்கு நல்ல விளம்பரமாக விளங்கியது.

ஆகூழ் :

தந்தை பெரியார் வீட்டுக்கு அடுத்த வீட்டிலே வேலாயுதனார் குடியிருந்தார். அது ஒற்றிக்கு உட்பட்ட வாடகை வீடு. அவ்வீட்டுக்கு உரியவர்க்குப் பொருள் நெருக்கடி! வேலாயுதனாரிடம் சொல்லி அவ்வீட்டை விலைக்கு எடுத்துக் கொண்டு பணந்தருமாறு கேட்டு வந்தார் அவர். அவரைத் தந்தை பெரியார் பார்த்து விட்டார். பக்கத்துவீட்டுக்காரர் அல்லரோ!

CC

"அடிக்கடி காண்பதில்லையே! இன்று வந்ததென்ன?" என்றார் பெரியார். பக்கத்து வீட்டுகாரர் தம் பாட்டைப் பாடினார்; "நீர், வேலாயுதனாரைப் பார்க்க வேண்டாம். நானே வீட்டை எடுத்துக் கொள்கிறேன்; இரும்," என்று சொல்லி உடனே எழுதும் ஏற்பாட்டில் தலைப்பட்டார். ஒரு சொல் அவரிடம் சொன்னால் நல்லது; குடியிருப்பவராயிற்றே என்றிருக்கிறார், இரக்கம் கொண்ட அண்டை வீட்டார்.

"வாடகைக்குத் தானே இருக்கிறார்; வேறு வீடு பார்த்துக் கொள்வார்; வீடு பார்க்குமளவும் இங்கே இருக்கட்டும்” என்று