உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

வலியுறுத்தி விட்டார். பெரியார் உடனே ஆவணம் எழுதிப் பதிவும் முடிந்தது! பேராயச் சார்பில்நகராட்சித் தலைவராகப் பெரியார் இருந்த காலம் அது அப்பொழுது நாகம்மையாரும் இருந்தார்.

46

என்றும் வராத அண்டை வீட்டுக்காரர் வந்ததென்ன? அவரோடு காதோடு காதாகப் பேசுவதென்ன?" எனப் பெரியாரிடம் வினா வினார் அம்மையார்! "அவர் வீட்டை விலைக்குப் பேசி முடித்தோம்; எழுதியும் ஆயிற்று என்றார்."

"நமக்கென்ன வீடா இல்லை! எத்தனை வீடுகள் உள்ளன! நமக்குப் பக்கத்து விட்டுக்காரர்கள் நல்லவர்கள். அவர்களை உடனே வேறு வீடு பாருங்கள் என வெளியேற்றுவது நமக்கு அழகாக இருக்கிறதா? அவர்கள் நமக்கு என்ன கெடுதி செய்தார்கள்? நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப்போகிறது என எண்ணினேன்; அப்படியே ஆயிற்று! இந்த ஆசையும் கெட்ட எண்ணமும் வேண்டாம்" என்று கூறினார் அம்மையார்! வீடு எழுதியாயிற்றே! என்ன சொல்லி, என்ன ஆவது?

நண்பகல் உணவு முடிந்து பெரியார் அமர்ந்திருந்தார். நாகம்மையார் மனக்கவலை மாறிற்றறில்லை! "கூட்டைப்பிரித்துக் குஞ்சுகளோடு குருவியை ஓட்டும்" கொடுமையைச் செய்ய அத் தாய் உள்ளம் பொறுக்கவில்லை! சொல் கேட்பார் என்ற நம்பிக்கையும் இல்லை! அந்நிலையில் காவல் துறையினர் இருவர் பேராயக் கட்சித் தலைவர் பெரியார் முன் வந்து நின்றனர். உங்களைச் சிறைப்படுத்த ஆணையுள்ளது" எனக் காட்டி நின்றனர். வீட்டுக்கு ஆவணம் எழுதி முடித்து, இரண்டு மணிப் பொழுதும் ஆகவில்லை! ஆங்கில அரசாணை சிறைப்படுத்துமாறு வீடு தேடிவந்து நின்றது.

நாகம்மையார் நல்லுள்ளம்படபடத்தது! "நீங்கள் காலையில் செய்த செயல் நல்ல செயல் இல்லை. அதற்கு மாலைப் பொழுது வரைக்கும் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உடனே தண்டனை வந்து விட்டது. அந்த வீடு வேண்டாம்; அவர்களைக் குடியெழுப்ப வேண்டாம்; இப்பொழுதாவது அவர்களுக்கு அவ்வீட்டைத் தருவதாக உறுதி சொல்லுங்கள்" என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கூறினார். பெரியார் சிறைப்படுத்தப் படுகிறார் என்னும் கவலையினும், அண்டை வீட்டுக்காரர்