உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

41

அப்புறப் படுத்தப்படுகிறார் என்ற கவலையே மிஞ்சி நின்றது. பெரியார் உள்ளம் இளகியது; இரங்கியது. "உன் விருப்பம் போலவே வீட்டை அவர்களுக்கே எழுதித் தந்து விடுகிறேன். நான் கொடுத்த விலையைத் தந்தாலே போதும்! இது உறுதி! என்றார். அந்த இடரான பொழுதிலும் "நல்லதொன்று செய்தோம்" என்னும் நிறைவில் நாகம்மையார் மகிழ்ந்தார். பின்னர்ப் பெரியார் தம் சொற்படியே அவ்வீட்டை வேலாயுத னார்க்கே எழுதித் தந்தார். அந்தநன்றியை இன்றும் அவ்வீட்டின் ஒவ்வொரு கல்லும் செங்கல்லும் சொல்லும் அளவில் அரச மாணிக்கனார் குடும்பத்தவர் நினைந்து பாராட்டு கின்றனர். பெரியார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் என்று கூறுவ தென்ன? பெரியார் வீட்டுக்காரர்கள் தாமே அவர்கள்! பெரியாரிடம் இருந்து ஒருவர் இவ்வாறு விலைக்கு வாங்கியது பெரிய விந்தையான செய்தி என்பதில் ஐயமிருக்க முடியாது! வறடிக்கல் சுற்றல்

அன்பு நெறியில் தழைக்கும் வேலாயுதனார்க்குத் திருமண மாகிப் பன்னீராண்டுகள் ஆகியும் மக்கட்பேறு வாய்த்திலது! உடன் பிறந்தார் பிள்ளைகளை, உரிமையால் வளர்த்தார். வேலாயுதனார் பிள்ளைகளின் மேல் பெரு வாஞ்சையர்; ஊரார் பிள்ளைகளையும் ஊட்டி வளர்க்கும் உருக்கத்தால் எப்பொழுதும் எந்நாளும் பக்கத்து வீட்டுப்பிள்ளைகளும், தெருப்பிள்ளைகளும் தாமரை பூத்த குளம்போலக் குடும்பத்தில் திகழச் செய்தார்; அவர்கள், கூடியுண்ணும் புறாக்குடும்பம் என மகிழ்வித்தனர். எனினும் தமக்கெனப் பிள்ளை வேண்டும் என்று வேட்கை இல்லாமல் போகுமா? பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" என்பதை எண்ணி எண்ணித் திளைப்பவர் அல்லரோ வேலாயுதர்! அன்றும் இன்றும் திருச்செங்கோட்டு உச்சியில் உள்ள வறடிக் கல்லைச் சுற்றி வந்தால் மகப்பேறுண்டாம் என்பது பெருவழக்காக இருந்தது, இருக்கிறது. (வறடி மலடி; மகப்பேறில்லாள்)

மலை உச்சியில் நிற்கும் ஒற்றைக்கல்! சுற்றி வருவதற்கு இடரான இட்டடி இடம்! காற்று வெருட்டியடிக்கும்! தடுப்பிலா உயரம்! கீழே தலையறுந்து போகும் பள்ளத்தாக்கு! வெங்கிட்டம் மையார் வறடிக்கல்லைத் துணிந்து சுற்றியிருக்கிறார்! "தம் உயிர் தந்தும் தாம் பிறிதுயிரை வயிறு வாய்க்க வேண்டும்" என்னும்