உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

43

குழந்தை முட்டினால் என்ன? மோதினால் என்ன? பெற்றோர்க்கு அவை பேரின்பமே

குழந்தை உளறினால் என்ன? குழறினால் என்ன? இனிய மழலைத் தேனாம் பெற்றோர்க்கே!

குழந்தை உருண்டாலும் புரண்டாலும் உதைத்தாலும் பொய்ச்சினம் அன்றி மெய்ச்சினம் வருவதில்லையே பெற்றோர்க்கு? சுறுசுறுப்பு மிக்க பிள்ளை, பெற்றோர்க்கு ஒவ்வொரு நொடியும் அச்சமூட்டும்! அலக்கணூட்டும்! பதைக்க வைக்கும்! திகைக்க வைக்கும்! ஆனாலும், உள்ளுள் ஓர் உவகை ஊற்றெடுக்கவே செய்து விடும்!

தொடக்கக்கல்வி

ஆடிப்பாடி அழகு காட்டித் திரிந்த அரசமாணிக்கம் அந்நாள் வழக்கப்படி ஆறாம் அகவையில் ஈரோடு சி.எசு.ஐ. இலண்டன் பள்ளியில் சேர்க்கப் பெற்றார். முதல் ஐந்து வகுப்புகள் அங்கே பயின்றார். சிறந்த தேர்ச்சியும் பெற்று வந்தார். உயர்நிலைக்கல்வி

ஐந்தாம் வகுப்பு முடித்தபின் மாசன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கே தமிழார்வமிக்க தலைமையாசிரியர் சண்முகனார் இருந்தார். அவர் ஆர்வமும் அரவணைப்பும், "வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிதல்" போலப் பயன்பட்டது. மாணவர்கள் தமிழ் உணர்வுடன் விளங்கினர். அரசமாணிக் கனார் தமிழ் உணர்வுச் சான்றொன்று முன்னரே சுட்டப் பெற்றது!

அந்நாளிலேயே வகுப்புத் தலைவராகவும், கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசு பெறுபவ ராகவும் விளங்கி உள்ளார்.

உயர் நிலைப்பள்ளி வகுப்புகளில் அரசமாணிக்கனார் வகுப்புத் தலைவராக இருந்த துடன்பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றச் செயலாளராகவும் விளங்கினார். தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்துப் பரிசும் பாராட்டும் பெற்றார்.

இளங்கன்று பயமறியாது' என்பது பழமொழி; வாய்த் துடுக்காக எதையும் பேசும் கைத்துடுக்காக எதுவும் செய்யும் என்பதை விளக்கும் பழமொழி இது. 'கட்டுக்குள் இளமை நில்லாது' என்பதே இதன் குறிப்பு. ஆனால் அரசமாணிக்கர்