உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

இப்பழமொழிக்குக் கட்டுப்பட்டவர் அல்லர். துணிவு உண்டு; ஆனால், முரட்டுத்தனம் அன்று! கட்டுப்பாடு உண்டு. ஆனால் அது அடிமைப் பட்டது இல்லை! தமக்குத் தாமே கட்டொழுங்கு கொள்ள வேண்டும் என்பது அரசமாணிக்கர் இளமை உறுதி. தாம் எவர்க்கும் மதிப்புத் தந்து பேசுதல் வேண்டும் அவ்வாறே அவர்கள் மதிக்குமாறு நடந்து மதிப்புப் பெறுதல் வேண்டும் என்பது தமக்குத் தாமே கொண்டொழுகிய நெறி. தாம் எவ்வளவு இளைஞரையும் அடே, போடா, வாடா என அழைப்பது இல்லை என நோன்பு கொண்டவர் அவர்! பன்னீரைத் தெளித்தால் பன்னீர் தானே தமக்கும் தெளிக்கப் பெறும். அதனால் இளமை தொட்டே அவரை அவ்வாறு அழைத்தாரும் இலர்! இளைஞர் வாழ்வுக்கு இஃதோர் எடுத்துக்காட்டு.

விளையாடல் :

ளமைக்

சுறுசுறுப்பு மிக்கவர்களுக்கு விளையாட்டு என்பது இன்பப் பொழுதுபோக்கு. அரசமாணிக்கனார் கிளர்ச்சி 'வாளா' இருக்குமோ? அதிலும் மாணவர் குழுவின் தலைமையுடையார் ஒதுங்கி நிற்கவும் கூடுமோ? பள்ளி விளையாட்டுகளில் பெரிதும் ஆர்வம் கொண்டார். விளை யாட்டுப் போட்டிகளிலும் பரிசும் பாராட்டு இதழும் பெற்றார். குறிப்பாக உதைபந்து ஆட்டத்தில் தனித் தேர்ச்சி காட்டினார். ஒரு நன்மாணவர்க்கு உடல், உள்ளம், மூளையாகிய மூன்றும் செவ்விதிற் பயிற்சியுற வேண்டும்! இம்மூன்றையும் ஒருங்கே வளர்த்துக் கொள்வார் அரியர்! அவ்வரியருள் ஒருவராக விளங்கினார் அரச மாணிக்கனார்.

குடியின் பெருமை :

மாணிக்கம் உயர்நிலைப் பள்ளியில் கால் வைத்த காலம். தந்தை பெரியார் வீட்டில் அவரும் பெரியாரின் தமையனார் மகன் கசபதியும் சில சிறுவர்களும் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தனர். அங்கே சில பிராமணர்கள் கூட்டமாக வந்தனர். அவர்கள் பெரியாரிடம், “எங்கள் இனத்தை நீங்கள் இழித்தும் பழித்தும் பேசுவது முறையா? என வருந்தியுரைத்தனர். அப் போதில் பெரியார் மாணிக்கத்தைச் சுட்டிக் காட்டி "இப் பையன் வீரசைவன். வீரசைவத்தலைவர் பசவேசர். அவர் ஒரு பிராமணர்; அவரை விடவா நான் பிராமணர்களைப் பழித்துச் சொல்லி விட்டேன்?" அவர் சொல்லிய அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட