உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

47

பொழிந்தார். கூட்டத் தலைவர் கூட்டம் முடியுமுன் கிளம்ப முடியுமா?கூட்டத்திற்கு வந்த விருந்தினரை அனுப்பாமல் புறப்பட முடியுமா? விழா இடத்தை ஒழுங்குபடுத்தாமல் உடனே போய்விடவும் முடியாதே! விழா ஏற்பாட்டுக்கு ஆகும் பொழுதில் ஒரு பாதியாவது விழா முடிவுக்குப்பின் ஒழுங் குறுத்தப்பொழுது ஆகுமே! அரசமாணிக்கர்க்குத் தந்தையார் இட்டுள்ள நிலையாணை, எக்கரணியம் கொண்டும் மாலை 5 மணிக்குள் கடைக்கு வந்து தீர வேண்டும் என்பது. இது புதுவதன்று; ஆறாம் வகுப்புக் காலம் தொட்டே நிலைபெற்று வரும் திட்டம்!

சுப்பிரமணியனார் கூட்டம் நிகழ்ந்த அன்று அரசமாணிக் கனார் கடைக்கு வர மாலை 6 மணியாயிற்று. ஒவ்வொரு நொடியும் விரைவுபடுத்திக் கொண்டும், தந்தையார் ஆணையையும், அவர் கடுமையையும் எண்ணிக் கொண்டும் கடனாற்றியும் ஒரு மணிப் பொழுது காலத் தாழ்வாயிற்று. காரணம் சொல்லுதல் என்பது வேலாயுதனார் விரும்புவதில்லை! கட்டளை ஒன்றே குறி!

மாணிக்கர் வரும்போது நாலைந்து மாணவர் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு இருந்தனர். மாணிக்கரை, "ஏன் பிந்தி வந்தாய்?" என்றார் "தனியே கண்டிக்கலாம்”; என்றோ, காரணம்கேட்டுத் தண்டிக்கலாம் என்றோ எண்ணி அமைந்தா ரல்லர்; பளார் பளார் என ஓங்கி அடித்து விட்டார்; எப்பொழுதும் அடித்தால் இடக்கை அடிதான்! அடிபட்ட மாணிக்கர்க்கு அவ்வலியினும் உள்வலியே மிக்காயிற்று! "என்னை உடன் மாணவர்களின் முன் அடித்து விட்டார்" என எண்ணினார்! கடையை விட்டார்! வீட்டுக்குப் போதலைத் தவிர்ந்தார்! கல்லூரி விடுதிக்குப் போய் விட்டார்!அங்கேயே நண்பர் களோடு உண்டு, அவர்களோடு தங்கிவிட்டார்!

வீடுசென்ற வேலாயுதனார் மைந்தனைக் கண்டிலர்; அவர்தம் அன்னையாரே வீட்டில் இருந்தார். இனிய துணைவியார், மனநோய் கொண்டு சென்னையில் மருத்துவமனையில் இருந்த காலம் அது! அதனால் செய்தியறிந்த பாட்டியார் துடித்தார். "ஆறாம் சினமும் எடுத்ததற்கெல்லாம்கண்டிக்கும் கண்டிப்பும் தண்டிப்பும் எங்கே கொண்டு போய்விடுமோ? என் ஏங்கினார்! எங்கும் தங்கமாட்டானே, எவ்வீட்டுக்கும் போக மாட்டானே," இந்த இரவில் எங்கேதான் தேடிக்காண்பது எனத் திகைத்தார்.

44