உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

கல்லூரி விடுதியைத் தேடிவந்து அவர் கால்கள் நின்றன! மாணிக்கரைக் கண்டு கண்ணீர் பெருக்கினார்! மாணிக்கரும் பாட்டியின் கண்ணீரில் நனைந்து கண்ணீர் பெருக்கினார். "பாட்டியின் அன்புக்கு அளவே இல்லை! காலமெல்லாம் ஊட்டி வளர்த்த கை அந்தக் கை! பாசம் பொழியும் பல்நெஞ்சம் அவர் நெஞ்சம்" என்று இன்றும் பாராட்டும் மாணிக்கர், அந்த இக்கட்டான பொழுதில் எப்படித் தேம்பியிருப்பார்!

பாட்டியும் பேரனும் வீட்டையடைந்தனர். வீடு கவலை இருளில் கப்பிக் கிடந்தது. ஆக்கிய கறிகள் அப்படி அப்படியே இருந்தன! எவர்க்குப் பசி! எவர்க்கு நீர் வேட்கை! எவர்க்கு உறக்கம்! தீராக்கவலை இவற்றையெல்லாம் ஒரு சேரத் தீர்த்துக் கட்டிவிடும்போலும்!

தந்தையார் தம் செயலை எண்ணினார் போலும்! அமைதிப் பிழம்பாக இருந்தார். தம் அறியாச் சிறு சினத்தை யெல்லாம் 'படையல்' இடுவது போலவும் மாணிக்கரைத் தழுவினார். அண்ணார் சிவலிங்கம், தங்கை சரசுவதி, பாட்டி, தந்தை ஆகியவர்களுடன் அரச மாணிக்கர் அமர்ந்து ஒருங்கே உண்டார்! எந்த ஒரு நிகழ்ச்சியும் நல்ல படிப்பினையாக அமையுமானால், வரவேற்கத் தக்கதுதானே? 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும், ஏமப் புணையைச்சுடும்” என்பதை வேலாயுதனார் தெளிவாக அறிந்து கொள்ளற்கே இந்நிகழ்ச்சி நடந்தது போலும்! ஏனெனில் அதன் பின்னர் அவர் இடக்கை, தம் மக்களைத் தண்டிக்க நீண்டதில்லை!

வணிகத்திற்குத் துணை

அரச மாணிக்கனார் இளம்பருவம் முதலே வணிகத்திற்கு உதவியாக இருக்க வேண்டிய குடும்பச் சூழலில் இருந்தார். காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று பொழுதுகளிலும் தந்தை யார்க்கு ஓய்வு தந்து உணவுக்குச் சென்றுவர உதவும் கையாளாக இருக்கும் கட்டாயம் நேர்ந்தது. அதனால், பள்ளிப் பாடங்களையும்சரி,கல்லூரிப் பாடங்களையும் சரி வகுப்பில் பாடம் கேட்கும்போது ஊன்றிக் கேட்கும் கேள்வித் திறத்தாலும், தேர்வன்று படிக்கும் படிப்பாலுமே தேர்ச்சி பெற்று வந்தார்!

-

ஒரு

பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிக் கேட்டல் கால்பங்குத் தேர்ச்சியாம்என்றும், நன் மாணவர்களுடன் பயிலும் பயிற்சியால் மற்றொரு கால்பங்குத் தேர்ச்சி அமையும்