உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

49

என்றும் இலக்கண நூலார் கூறுவர். மாணிக்கர்க்கு வகுப்பில் தேர்ச்சி மிக்க மாணவர் கூட்டுறவும், ஆர்வமாக வகுப்பில் கேட்கும் கேட்பும் ஆகிய இரண்டும் இணைதலால் ஐம்பது விழுக்காடு பெறுதலில் குன்றாதிருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் இவர் தம் விளையாட்டுத் தோழர்கள் பலரும் தோல்வி யுற்ற போதும் இவர் வென்றமை, "ஒற்கத்தின் ஊற்றாம் துணை' என்னும் கேள்விச் சிறப்பை விளக்கும்.

"எப்படியும் இவன் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்? என்ன படித்தாலும்தான் என்ன? வாணிகக் கல்விதானே வேண்டும்" என்னும் திண்ணிய முடிவுக்கு வந்துவிட்ட வேலாயுதனார் இவர்க்கு வணிகப் பயிற்சி தரும் கருத்தையே மேற்கொண்டார்!

வணிகப் பயிற்சி

எட்டாம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே தனியே சென்னைக்கு அனுப்பி வேண்டும் பொருள்களை வாங்கி வரச் செய்வார் தந்தையார் தொகை சிறு தொகையா? ஒரு முறை ஒன்பதாயிரம் உருபா தந்து அனுப்பினார்! எவ்வளவு நம்பிக்கை அது! தன் மகன்மேல் கொண்ட தெளிவு எத்தகையது! மாணிக்கனார்க்கு எப்படி அத்துணிவும் தெளிவும் உண்டாயின?

வேலாயுதனார் கணக்கு வகையில் மிகமிகக் கண்டிப்பானவர்! சிற்றுண்டி உண்டு வரப் பத்து உருபா, ஐந்து உருபா என்றே தருவார். ஆனால் கால் உருபா, அரை உருபாவுக்கு மேல் செலவிட வேண்டியிராது. ஏன்? அத்தொகையையே தந்து அனுப்பலாமே! அதைச் செய்வதில்லை வேலாயுதனார். "கொண்டு சென்ற தொகை, உண்டவகைச் செலவு, எஞ்சியது, கணக்கெழுதி ஒழுங்காக ஒப்படைக்கப்படுகிறதா?" என்னும் கண்காணிப்பு! இவற்றுக்கு, வேண்டும் அளவுச் சில்லறை பயன்படாவே! பணம் நிரம்ப இருக்க வேண்டும்! இருக்கும் போதில் சிக்கனம் பேண வேண்டும் செலவுக்குக் கட்டாயம் கணக்கு எழுதியாக வேண்டும் சல்லியாக இருந்தாலும் சரி; கணக்கு கணக்கே! இந்தக் கல்வி ஏட்டால் கிட்டுமா? கணக்கை மறந்தால் தவறாக எழுதினால் ஏடு கண்டிக்காதே! தண்டிக்காதே! இவற்றையுடைய தந்தையார் அல்லரோ பயிற்றுகிறார்.

கோயிலுக்குப் போவார் -குளத்திற்குப் போவார்; தேர்த் திருவிழாக்களுக்குப் போவார் வேலாயுதனார்! அப்பொழு