உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

தெல்லாம் மூத்த மைந்தர்சிவலிங்கனாரை அழைத்துச் செல்வார்! சந்தைக்குப் போக, கடனைக் கேட்க, கடனைக் கொடுக்க -ஏவுவார் மாணிக்கரை! செல்வம் கொடுத்துச் சீராட்டி வளர்த்தார் மூத்தவரை! கண்டிப்பில் வளர்த்தார் இளையவரை! வேலாயுதனார் தந்தையன்பில் வேற்றுமையுண்டோ? இல்லை! பின் ஏன்? இரண்டும் அன்பே! இருவேறு தனிவகை அன்பே - என்பதை உணர்வார், உணர்வார்!

ஏன்

ஒரு பாராட்டு

இராசமாணிக்கர்க்கு ஒரு பாராட்டுக் கிடைத்தது; தந்தையார் செவி குளிரக் கிடைத்தது; தாம் செய்து வரும், 'செயற்பாட்டின் விளைவு செவ்விதே' என்னும் நம்பிக்கை ஏற்படும் வகையில்கிடைத்தது. "உங்கள் பையன் வணிகத்தில் உங்களையும் வென்று விடுவான்; விளையும் பயிர் முளையிலே என்பது விளங்குகின்றதே!" என்று தாம் மதிக்கும் பெரும் பெரும் வணிகரும் பாராட்டும் சிறப்பைக் கேட்டார். அதனினும் ஒரு தந்தைக்கு இன்பம் தரும் செய்தி என்ன? 'முந்தியிருக்கச்' செய்த பேறு தாம் செய்ததே அன்றோ! அதனைப் பற்றி மகிழாமல் இருக்க முடியுமா?

ஒரு மதிப்பு

ஈரோட்டில் ஒரு பெருஞ்செல்வர்; இசுலாமியர்; பெரு வணிகர்; அவர்க்கோர் மைந்தர்; அரச மாணிக்கரும் அவரும் கெழுதகைத் தேழர்; அவ்வன்பால், வாய்த்த பொழுதுகளில் அரச மாணிக்கர், அவர்கள் இல்லம் சென்று உரையாடி வருவது வழக்கம். இவ்வழக்கத்தை வேலாயுதர் விரும்பினார் அல்லர்; "போகக் கூடாது" என மைந்தர்க்குத் தடைவிதித்தார்; தந்தை சொல்வழி நின்றார் மைந்தர்; இருபது நாள்கள், அந்நண்பர் வீட்டுக்குச் செல்லவில்லை! என்ன நிகழ்ந்தது?

அரசமாணிக்கரைத் தேடிக்கொண்டு வந்து விட்டார்! எவர், அவர்தம் நண்பரா? இல்லை! நண்பரின் தந்தையார் ஆகிய பெருஞ்செல்வர்! அவர் வருகை எளிதன்று! அவ்வருகை வேலாயுதரை வியப்பில் ஆழ்த்தியது! வரவேற்று என்ன? என வினாவினார்."நாங்கள் என்ன தவறு செய்தோம்; என் பிள்ளை என்ன பிழை செய்தான்; அரசமாணிக்கம் 20 நாள்களாக எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை. அவனைக் காணாமல் வருந்துகிறோம். எங்கள் பிள்ளை, நல்ல பிள்ளை. ஒருவனோடு உறவாடுகின்றான்