உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

51

என்று மகிழும் எங்களுக்கு அவன் பாராமை மிக வருத்தமாக உள்ளது; என்ன சொல்கிறீர்கள்?" என்றார்.

எதிர்பாராத இவ்வுரை கேட்ட வேலாயுதர் விதிர்விதிர்த்தார்! தம்மகனைக்குறித்து உள்ளுள் வியந்தார். "சரி; வேறொன்றும் இல்லை; வேலை மிகுதி; ஓய்வு ஒழிவு இல்லை; இனித் தடை யில்லமல் வரச் சொல்கிறேன்; பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லி வழியனுப்பினார்.

விட்டுவ

மறுநாள், "நீ உன் நண்பன் வீட்டுக்குச் சென்று பேசி என்று தந்தையார் தாமே போகச் சொல்லியது மாணிக்கர்க்கு வியப்பாயிற்று! தடுத்தவர் அவரல்லரோ? விடுப்பவர் அவர் ஆகின்றாரே! அன்பர் வீட்டுக்குச் சென்ற போது தான் உண்மை விளங்கிற்று!

இக்குடும்ப அன்பு என்ன செய்தது? இந்நண்பரின் தந்தையார் அன்னையாரை மக்க மாநகர்க்கு அழைத்துச் செல்லுதற்குத் தாழ்த்தபோது, "நீங்கள் அழைத்துச் செல்லா விட்டால் என் பிள்ளை இராசமாணிக்கத்தை அழைத்துக் கொண்டு செல்வேன்" என்று தாய்மையுரை கூறச் செய்தது. அரசமாணிக்கர் திருமணத்திற்குத் தம் அன்னையார் மக்காநகரில் இருந்து வாங்கிக் கொண்டுவந்திருந்த புனித வளையலைத் தம் துணையுடன் வந்து வழங்கிச் செல்லும் ஊர் வியக்கும் ஒரு பெரும் புரட்சிக் செய்கையை ஆக்கிற்று! அன்பு நண்பு என்ன தான் செய்யாது? என வியப்புறுத்தும் குடும்ப நட்பாக என்றும் திகழ்வதாயிற்று.

இடைநிலைத் தடை

இடைநிலை பயின்ற அரசமாணிக்கர் தேர்வுக்கு முன்னரே படிப்பை நிறுத்தி வணிகத்தில் தந்தையாருடன் இணைய நேர்ந்தது. அப்பொழுது இவர்அகவை பதினெட்டே. தந்தையார் உடல் நலக் குறைவு இத்தடையை ஆக்கிற்று எனினும் கல்வி என்பது நான்கு சுவர்க்குள் மட்டும் அடங்கியதில்லையே. நூல் வெளியீட்டுப் பணி என்பது கல்வியின் மூலப்பணியும், முழு நிறைவுப் பணியும் அல்லவோ!

தந்தையார் தகவுகள் :

வேலாயுதனார் வட்டி வாங்குதலை விரும்பினார் அல்லர். எவ்வளவு தொகை இருப்பினும் அதனை வைப்பகத்தில் போட்டு