உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

வைத்தாலேயன்றி வணிகர்க்கோ பிறர்க்கோ வட்டிக்குத் தருதலை விரும்பினார் அல்லர். இக்கடைப்பிடியால் அவர்க்கு வேண்டும் போதெல்லாம் தட்டில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளவும், நாணயமாக நடந்து கொள்ளவும் முடிந்தது.

அவர்தம் மற்றொரு கருத்து 'எளிமை' யாகும். "எளிய வாழ்வே இனிய வாழ்வு" எனத் தெளிந்து தேர்ந்தார். "இடம்பட வீடெடேல்" என்னும் ஔவை மொழியைப் போற்றினார். பெரிய வீடு என்றால் கூட்டிப் பெருக்க வேலையாள் வேண்டும்; இடம் பெருகின் தேவையற்ற பொருள்களை வாங்கி நிரப்பும்

டர் உண்டாம். வேண்டாப் பொருள்களை விலைக்கு வாங்கி வைப்பது வீண்; இவற்றுக்கு அடிப்படை பெரிய வீடு; ஆதலால் சிறியவீடே போதுமென வாய்ப்பு இருந்தபோதும் அமைந் திருந்தார்.

வணிகவிரிவும் உயர்வும் :

வணிகத் தேர்ச்சியும் தமிழ்ப்புலவர் தோழமையும் வணிகர்கள் நம்பிக்கையும் பொதுமக்கள் நல்லெண்ணமும் ஒருங்கே கொண்ட வேலாயுதரின் வணிகம் ஈரோட்டில் நடந்தாலும் சேலம் கோவை மாவட்ட அளவும் விரிந்து சென்றது. கிளை வணிகர்களும் உருவாகி மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் நிலையும் உண்டாயிற்று.

ஒரு சொல் ஒருவர் சொல்லுமாறு நடந்து கொள்ள மாட்டார் வேலாயுதர். பழிச்சொல்லுக்கு மிக நாணும் அவர் ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு" என்னும் குறளுக்குச் சான்றாக விளங்கினார்.

எப்பொழுதும் தம் பொறுப்பிலே உள்ள ஓர் அறையின் திறவையை (சாவியை) யும், தூவலையும் வைத்துப்பழகுதல் வேண்டும்; திறவு தூவல் இல்லாமல் இருத்தல் கூடாது என வலியுறுத்துவார். அவ்வாறே அவர் வாழ்ந்த நாளெல்லாம் அதனைப் போற்றினார்.

பாட்டியார் பிரிவு :

தம் அன்புத் துணைவியார் வெங்கட்டம்மாள் மனநோய் வாய்ப்பட்டுப் பத்தாண்டுகளாக மருத்துவ மனையில் இருக்க நேர்ந்தது. அந்நிலையில் முதிய பாட்டியாரின் சமையலை நம்பி வீடு

ருந்தது! வீடு என்றால், 'வீட்டார்' மட்டும் உடைய