உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

53

வீடன்றே! எந்நாளும் விருந்தும் வேற்றும் புலவரும் வணிகரும் வந்து செல்லும் மனை ஆயிற்றே! முதிய பாட்டியார் என்ன செய்வார்?

"இப்படி எவ்வளவு நாள்தான் இவன் காலம் தள்ளப் போகிறானோ! நான்தான் எவ்வளவு காலம் உழைப்பேனோ? இவன் இன்னொரு திருமணத்தைச் செய்து கொண்டால் என்ன?' என்று பலரிடமும் கூறிக் கூறி அலுப்புற்றார்! நேரிலும் கூறினார்! பெண்ணும் பார்த்துவிட்டார்! வேலாயுதனார் உள்ளம் அசையவே இல்லை!

ஒருநாள் இரவு கற்பலகை (சிலேட்டு) செய்யும் ஒரு குழுமத்தைச் சேர்ந்தவர் நேரங் கடந்து வந்தார். உணவை முடித்து அனைவரும் படுத்து விட்டனர். வந்தவர் உண்ணாமல் வந்தார். பாட்டியார்தாம் எழுந்து ஏதாவது செய்ய வேண்டும்! எழுந்து தோசை போட்டார். போட்டுக் கொண்டே சொன்னார்; "பெண் இல்லாத வீடு இது; இவனை ஒரு பெண்டாட்டி கட்டிக் கொள்ளச் சொல்வதுதானே! இவ்வளவு நேரங் கடந்தும் உரிமையோடு வருபவர், இவனுக்கு இந்த அறிவுரை கூறலாமே! என்ன சொன்னாலும் கல்லாக இருந்து அசைய மாட்டேன் என்கிறான்" என்று தம் வெப்பத்தை யெல்லாம் தோசை சுடும் வெப்பத்தோடே கொட்டித் தீர்த்தார்! வேலாயுதர்க்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன செய்தி! "அவர்கள் பாடு அவர்களுக்கு" என்று அமைந்தார்! தாம் பெற்ற மக்களை உயிரெனக் கருதிய அன்புள்ளம் தாயின் வேண்டலை ஒதுக்கி உறுதியுடன் வாழ்ந்தது அக்காலத்தில் அரிதினம் அரிதாம்.

செல்லையாவும் நல்லையாவும் :

வேலாயுதர்க்குத் தம்பியார் செல்லையா என்பார். அவர் பேராயக் கட்சி சார்ந்தவர்; அழுத்தமான தொண்டர்; இயக்கப் பணியில் ஈடுபட்டு அரசியல் குற்றவாளியாய், ஈரோட்டில் இருந்து அலிபூர் சிறைக்குச் செல்லும் தண்டனைக்கு ஆட்பட்டார். ஈரோட்டில் இருந்து சென்னை வந்து நடுவண் நிலையத்தில்வண்டி யேறி அலிபூர் செல்ல வேண்டும். வேலாயுதரும் சென்னை வரை தம்பிக்காகத் தனியே உடன் சென்றார். தம் தம்பிக்கும் அவரைச் சேரந்தவர்க்கும் தாம் ஒரு வேளை உணவு தர வேண்டும் என விரும்பினார். தம் விருப்பைச்