உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

சிறையாளர்களைக் கொண்டு செல்லும் காவல்படைத் தலைவரிடம் உரைத்தார். "அரசு சிறைப்படுத்திக் கொண்டு செல்லும் சிறையாளர்களுக்குப் பிறர் வழங்கும் உணவை ஏற்பது இல்லை" என மறத்தார் அவர். ஆனால், வேலாயுதனார், “தம் தம்பி சிறையாளர்களுள் ஒருவர்; அவர்க்கு உடன்பிறந்தார் என்னும் நிலையில் உணவளிக்க விரும்பும் நான், அவரோடு சிறையுற்றவர் அனைவரையும் உடன்பிறப்பாகக் கருதுதல் முறைமை; ஆதலால் அருள் கூர்ந்து உதவ வேண்டும். உணவுக்கு நீங்களே ஏற்பாடு செய்யலாம்; அத்தொகையை முழுமையாக யான் வழங்கி விடுவேன்" என்று உறுதியுடன் தெளிவாகக் கூறினார்.

வேலாயுதனாரின் தோற்றப் பொலிவு அருள் தவழும் சொல்லும் அலுவலரை வயப்படுத்தின. அவர் விருப்பம் போலவே உணவு வழங்க ஆணை தந்தார்; உணவையும் அவ்வுணவை வழங்கும் அருமையையும் உணர்ந்து இப்படியும் பேருள்ளம் உண்டோ! உண்டோ? என்று புரிப்புடன் பாராட்டினார்! சிறையுற்ற செல்லையா ஆங்கிருந்தோர் அனவைராலும் நிறையுற்ற பேற்றாளராம் சிறப்புற்றார்! தமையனார் செய்கை தம்பியார்க்கு எத்தகைய பெருமையைச் சேர்த்து விட்டது! வீட்டு வாழ்வின் விழுப்பத்தால் கட்டப்படும் மாளிகையே நாட்டு வாழ்வு என்பதை வேலாயுதர்தம் செய்கையால் மெய்ப்பித்தார். 'ஈத்துவக்கும் இன்பம்' காணும் உள்ளம், 'ஒரு பொட்டலத்தை, வாங்கி, ஒருவர்க்கும் தெரியாமல் தந்து, மறைந்து கொண்டு உண்ணுமாறு வைக்குமோ?'

வழிவழி நல்லையா :

அதே சென்னையில் ஒரு பால்; நாள் : 10-9-1989. பாவாணர் நினைவு நூலகத்தில் குறளாய விழா! அவ்விழாவில் கலந்து கொண்டோர் - பொழிவாளர்கள் மட்டுமோ-கேட்பாளரும் கூடிய அனைவருக்கும் பெருவிருந்து! சிறந்த விடுதியிலே ஏற்பாடு! சில ஆயிரம் செலவு! ஒவ்வொருவர் இலையையும் பார்த்து ஒவ்வொரு வர் முகத்தையும் பார்த்து ஆரா அன்பில் ஊட்டும் தாயென உண்பிப்பு! வேலா அரச மாணிக்கனார் செயல் இது!

ஒருவர் சொன்னார்: "எதிர்பார்த்தற்கு மேல் வட்டம்! எதிர்பார்த்தற்கு மேல் செலவு