உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

55

"திருப்பதியில் கட்டுக் கட்டாகப் பணத்தாள் போடுகிறார்கள்! அவர்களுக்கு வேண்டுமானால் நிறைவாக இருக்கலாம்; இப்படி அகமும் முகமும் மலர உண்கின்ற இன்பத்தைக் காண முடியுமா? இந்த இன்பத்தை நோக்க, இது ஒரு செலவாகுமா?இப்பேறு கிடைக்க வேண்டமே" என்றார். எவர்? அரசமாணிக்கர்! வேலாயுதர் எட்டடி! அரச மாணிக்கர் பதினாறடி! சரிதானே! இராவண காவியம் :

1925-இல் தந்தை பெரியார் தன்மான (சுயமரியாதை ) இயக்கம் தொடங்கினார். அதில் ஆர்வத்தால் சேர்ந்து பெரியாரின் அணுக்கத் தொண்டராக விளங்கியவர் புலவர் குழந்தை. வேலாயுதனார்க்கும் குழந்தைக்கும் அகவை வேறுபாடு ஈராண்டுக்கு உட்பட்டதே. வேலாயுதனார் மூத்தார்; குழந்தையார் இளையார்; இவர்கள் தொடர்பு உண்டாகியதும் வளர்ந்ததும் அறிந்தனவே.

புலவர் குழந்தை 'இராவண காவியம்' இயற்றினார். தன்மான இயக்கத் தூண்டலின் விளைவாக அமைந்த நூலைத் தந்தை பெரியாரிடம் எடுத்துச் சென்றார். கம்பன் பாட்டுப் போலவே அமைந்திருந்த இராவண காவியத்தைக் கண்ட பெரியார் உவந்தார் அல்லர்; உவர்ப்புற்றார்; கையிலே எடுத்த சுவடியைக் கீழே போட்டு விட்டு, "கம்பன் எழுதிய இராமாயணம் செய்து வரும் தீமையை ஒழிக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் இது வேறு வேண்டுமா? வேறு ஏதாவது எழுதக் கூடாதா?" என்றார்.

‘அழகு! அழகு!' எனத் தாம் பெற்ற பிள்ளையைக் கொண்டு போய் வாழ்த்துக் கேட்ட இடத்திலே, இதன் முஞ்சியைப் பார் என்று முகத்திலே அறைந்ததுபோல் ஆயிற்று குழந்தையார்க்கு! அதனால், சோர்ந்த முகத்துடனும் தளர்ந்த நடையுடனும் வேலாயுதனார் பொத்தகக் கடைக்கு வந்தார்.

"என்ன முகவாட்டத்தோடு இருக்கிறீர்களே" என்றார் வேலாயுதர். நிகழ்ந்ததைக் கூறினார் புலவர்; அவர் நிலைக்கு வருந்திய வேலாயுதரிடம் நீங்களாவது வெளியிடுங்கள் என்றார் புலவர். “நான் வீரசைவன்”; இராவண காவியத்தை வெளியிட்டால் உலகம் என்ன பேசும் என்று தயங்கினார். உடனிருந்த புலவர் சிவ. குப்புசாமியார், இராவண காவியத்தை நீங்கள் வெளியிடாமல் எவர் வெளியிடுவது? இராவணனைப் போல ஒரு வீர சைவன் உண்டா? அந்தவீர சைவன் நூலை வீர சைவன் வெளியிடுவது