உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தானே பொருத்தமானது; இதனை மறுத்துக் கூறுவார் எவர்?' என்று கூறி வேலாயுதரை நூல் வெளியிடத் தூண்டினார். இராவணன் வீரசைவன் என்பதை அறிந்து கொண்டதாலும், புலவர் குழந்தையின் கவலையைத் தீர்க்கக் கருதியதாலும், குப்புசாமியார் வற்புறுத்தலை மறுக்க விரும்பாமையாலும், தாமே நூலைவெளியிட ஏற்றுக் கொண்டார். காருவாப் போதிலே, வெள்ளுவாக் காலூன்றியது போல் களிப்புடன் சென்றார் புலவர்.

இராவண காவியத்தை அச்சிட வேண்டும் தக்கவர்களிடம் முன்னுரை வாங்க வேண்டும். இரண்டு கடமைகளும் முன்னின்றன!

பணமிருந்தால் அச்சிடற்கு என்ன? என்று தோன்றலாம்! பணம் இருந்தால் மட்டும் சில செயல்களைச் செய்துவிட முடியாது!

ராம்

கம்பன் புகழ், கொடி கட்டிப் பறக்கும் தமிழகம்! வழிபாடு, வீடுதோறும் வீதிதோறும் உலாவரும் தமிழகம்! அந்த இராமன் புகழைக் குறைப்பது மட்டுமல்லாமல், 'இரக்கமிலா அரக்கன் என இகழப்படுபவன் ஆகிய இராவணன் இரக்க முடையான் என்றும் இராமனே இரக்கமிலா அரக்கன் என்றம் சொல்லும் இராவண காவியத்தை எத்தனை பேர் துணிந்து அச்சிட வருவர்?

'பிராமணர்கள்' இதனை வெளியிட மாட்டார்கள்; 'வீரத் தமிழர்களே வெளியிடுவார்கள்' என எழுந்த நம்பிக்கையால் எத்தனை எத்தனை அச்சகங்களில் ஏறி இறங்கினர்! அச்சிட ஏற்பார்இல்லை! நம்பிக்கையற்றுப் போய்ச் சோதி அச்கம் என விளங்கிய ஓரச்சகத்திற்குச் சென்றனர். இராவண காவியம் என்றனர். "இராம காவியம் ஆயினும் சரி; இராவண காவியம் ஆயினும் சரி; அச்சிட்டுத்தருகிறேன்" என்றார் அச்சக உரிமையாளர் ஐயர்! நம்பாமல் தலை சுற்றியது வேலாயுதர்க்கு! தம் காது கேட்கச் சொல்லும் சொல்லை -கடமை உ உணர்வோடு சொல்லும் சொல்லை - நம்பாமல் என்ன செய்வது! முன் பணம் கொடுத்தார்! வேலை தொடங்கியது! விரைந்து முடிந்தது.

திருப்பூரிலே ஓரன்பர்; வேலாயுதர்க்கு வேண்டியவர்; கழக ஈடுபாட்டாளர். இராவண காவிய வெளியீட்டுப் பொருளுதவிக்கு முன் வந்தார். "நம்புகழ் எஃ. ஆர். சுப்பிரமணியன்" என்று பாவேந்தர் பாராட்டுப் புகழாளரானார். இடர் ஒவ்வொன்றாய்