உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

57

விலகினாலும், அறிஞர் அண்ணாவினிடம் முன்னுரை வாங்க வேண்டாம் என்னும் எண்ணத்தில் காலம் சென்றது.

அண்ணா சென்னையில் இருந்தார். புலவர் குழந்தையும் வேலாயுதரும் மீண்டும் சென்னை சென்றனர். மூன்று நாள்கள் தங்கினர்; அண்ணாவுக்கு ஓய்வு ஒழிவு இல்லை. புலவர் குழந்தை மட்டுமே மூன்றாம் நாள் அண்ணாவைப் பார்த்துப் பேசினார். மறுநாள் பார்க்கலாம் என்றார் அண்ணா! புறப்பட்டுப் போகும்போது, "நீங்கள் மட்டும் தானே வந்தீர்கள்" என்றார் அண்ணா. இல்லை. வேலாயுதனாரும் வந்துளார்; அவர்தாம் நூலை வெளியிடுகிறார் என்றார் குழந்தை.

தந்தை பெரியார் இல்லத்தில் அண்ணா தங்கியிருந்த போது, அடுத்த வீட்டில் இருந்த வேலாயுதனாரை அறிவார், அவர், சுறுசுறுப்பான வணிகரே! அவரைக் காக்க வைத்தால் வணிகத்திற்கு நல்லது இல்லையே! உடனே எழுதித்தருகிறேன். வாங்கிக் கொண்டு செல்லுங்கள்" என்றார். அவ்வாறே அன்றே எழுதித்தந்தார். எல்லாம் இனிதாய் நிறைய ஈரோடு திரும்பினர்.

1946-இல்இராவண காவியம்வெளிவந்தது. 1948-இல் தடையுண்டது! புகழ் பரப்பும் வழிகளுள் ஒன்று தடைப்படுத்துதல் போலும்!

தீரன் சின்னமலை

வேலாயுதனார் கடைக்கு ஒரு நாள் 6 அடி, 6 அடி உயரமுள்ள இருவர் வந்தனர். இருவரும் அண்ணன் தம்பியர்; எவரையும் ஏறிட்டுப்பார்க்க வைக்கும் தோற்றப் பொலிவு; கடையில் வேலாயுதனார் இருந்தார்.; புலவர் குழந்தையும் இருந்தார். அவர்களுக்கு இவர்கள் இருவருமே பழக்கம் உடையவர்களே! அவர்கள் இருவரும் தீரன் சின்னமலையின் வழி முறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் "இந்தப் புலவன் எதற்கும் ஆகாதவன்" என்றார்! புலவரும் வேலாயுதரும் திகைத்தனர். அவர் தொடர்ந்தார்: "வெள்ளைக்காரனை எதிர்த்தவன் தீரன் சின்னமலை; வெள்ளைக்காரனைப் புகழ்ந்து வாழ்ந்தவன் பட்டக்காரன்; அவன் சின்னமலையின் புகழை வெளிப்படாமல் மறைத்து விட்டான். இவன் பட்டக்காரனைப் புகழ்ந்து பாடுகிறான். சரியான புலவன் என்றால்சின்னமலையை அல்லவா பாட வேண்டும்" என்றார். “சின்னமலையைப் பாடிப் புத்தகம் போட்டால் விலை போகுமா?" என்றார் புலவர். "விற்றுப்