உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

பிழைப்பதற்காகவா பாடுவது? வீரம் வேண்டாம் என்றார் வளர்ந்தார்!

வேலாயுதனார் உள்ளத்தில் ஓர் ஒளி பளிச்சிட்டது! "இவர் சொல்வது சரிதான். தீரன் சின்னமலை என்னும் பெயரால் ஒரு வரலாற்று நூலை எழுதுங்கள். நாம் அதனைத் துணைப் பாட நூலாக்கிப் பரப்பலாம் என்றார். அப்படியே நூல் எழுதப்பட்டது. துணை நூலும் அயது! நாடு தழுவிய அளவில் பாடமாக விளங்கியது. தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் இந்நாள் இயங்குவதன் மூலச் செய்தி, இப்படி முகிழ்த்தாம்: இங்கும் அங்கும்

தந்தையார் ஈரோட்டில் இருப்பார்; மகனார் பெரும்பாலான காலம் சென்னையில் இருப்பார் ஏன்?

நூல் அச்சீட்டுப் பொறுப்பை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் கடமை மைந்தர்க்கு உண்டாகியது! பள்ளிப் பாடநூல்களை, பொது நூல்கள், என்பனவெல்லாம் அச்சிடல், மெய்ப்புப் பார்த்தல் என்னும் பணிகளுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். இப்பணிக்கு உற்ற உதவியுடனும் உழுவலன் புடனும் விளங்கியவர் அறிஞர் மா. இராசமாணிக்கானரின் அளியர் புலவர் பு. செல்வராசனார் என்பார்.

பள்ளிப்பாட நூல்கள், துணை நூல்கள், இலக்கண நூல்கள் என நூற்றுப் பதினேழு நூல்கள் வெயிட்டுத் தனி ஓர் இடத்தைப் பற்றிக் கொண்ட 'சிவலிங்க நூற்பதிப்புக் கழகம்' இராவண காவியத்தை மட்டும் வெளிப்படுத்திற்று இல்லை. திருக்குறள் குழந்தையுரை, தொல்காப்பியப் பொருளதிகாரம் குழந்தையுரை, நீதிக் களஞ்சியம், யாப்பதிகாரம், தொடையதிகாரம், கொங்கு நாடும் தமிழும், கொங்குக் குலமணிகள், குழந்தைப் பாடல்கள் எனப் பலவற்றை வெளியிட்டது. அரசியலரங்கம் என்னும் நூல் வேலா அவர்களே புலவர் குழந்தை அவர்களைத் தூண்டி எழுதிய நூலாகும். அறிஞர் வி. பொ. பழனி வேலனார் எழுதிய வேலா பிறமொழி தமிழ் அகர முதலியையும் எழுதி வெளிக் கொண்டு வந்தது. சிந்தனைச் செம்மல் ஆனந்தனாரின் வடிவிழந்த வள்ளுவம். வள்ளுவர் பொருளியல் கொள்கை முதலியவற்றையும் பிற்காலத்தில் வெளியிட்டது.

"அச்சப்பணியோ நச்சுப் பணியோ" என்பது பழமொழி. அப்பழமொழி மெய்ப்புப் பார்த்தல்சிக்கலால் ஏற்பட்டதாகும்.