உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

95

என்னும் மொழிக்குச் சான்றாக இலங்கிய பெரியார் டிலெசெப்சின் மேல் உலக மக்கள் நோக்கம் திரும்பியது! பிரெஞ்சு அரசியார் 'கோமான்' என்றும் உயர்பட்டம் வழங்கினார். அதுவரைக்கும் முட்டுக்கட்டையாக இருந்த இங்கிலாந்தும் புகழ்ந்து பேசியது. விக்டோரியா மகாராணியார், டிலெசெப்சைத் தம் பளிங்கு மாளிகையில் வரவேற்றுப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நம்முடைய வாழ்த்தும், இனிவரும் உலகோர் வாழ்த்தும் வீரர் டிலெசெப்சிற்கு உரித்தாம்.

வாழ்க உலகுக்குழைத்த உரவோர்!