உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

3

இரவீந்திரருக்கு ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்பித்தார்; விண்மீன்களையும், கோள்களையும் வானத்தை நேரில் காட்டி விளக்கினார்; நேராகத் தாவர இயலைக் கற்பித்தார்; இவற்றால் இரவீந்திரர் தாமே உற்றறியவும் எண்ணிப் பார்க்கவும் திறம் பெற்றார்.

கல்லூரிக் கல்வி :- கல்கத்தாவுக்குத் திரும்பிய இரவீந்திரர் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். கல்வி ஓரளவு கவர்ச்சியாக இருந்தது; கற்பித்த ஆசிரியர்களும் நிறைவளித்தனர். எனினும், இமயமலைக் காட்சி தந்த இன்பத்தை அடைய முடியவில்லை. ஆகவே ஏட்டுக் கல்வி அவ்வளவுடன் நின்றது. இயற்கைக் கல்வியோ பெருகத் தொடங்கியது.

முடிவுரை - உலகப் பெரும் புலவர் தாகூர், அவர் இளமைப் பருவத்திலேயே இயற்கையாகக் கற்பனை வித்துக்கள் ஊன்றப் பெற்றன; கதையும்; பாட்டும் நாடகமும் கற்பனை வரைத்துணை செய்தன; இயற்கைக் காட்சிகள் நெறிப்படுத்தின; "விளையும் பயிர் முளையிலே" என்பது மெய்யாயிற்று!