உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தாகூரின் கலைவளர்ச்சி

முன்னுரை:- கலைத்திறம் அரிதில் அமைவது; ஆனால், எளிதில் எவரையும் கவர வல்லது; கலைத்திறம் பெற்றவர்கள் உலகவர் பாராட்டைப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வர். அத்தகைய பேறு பெற்றவர் கவிஞர் தாகூர் ஆவர்.

சை

குடும்பத்தில் கலை:- தாகூரின் குடும்பமே ஒரு கலைக் கழகம் மூத்த அண்ணன் மெய்ந்நூற் பயிற்சியும் கணக்கறிவும் மிக்கவர்; ஐந்தாம் அண்ணன் சோதி ரீந்திரர் சீர்திருத்தக்காரர், நாடகங்களில் தேர்ந்தவர். இவர்கள் எப்பொழுதும் கலைஞர் களோடும் அறிஞர்களோடும் அளவளாவுவர். அப்பொழுது உடனிருக்கும் வாய்ப்பு. தாகூருக்குக் கிட்டியது. ஆகவே இக் கலைகளில் தாகூர் திறம்பெற வாய்ந்தது.

""

கதைத் திறம்: வங்கக் கதையாசிரியர்களுள் தலை சிறந்த ஒருவர் பக்கிம்சந்திரர்; அவர் எழுதிய கதைகள் "பங்கதர்சன் என்னும் திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தன. அக்கதை களைத் தாகூர் குடும்பத்தினர் விரும்பிப் படித்தனர். இரவீந்திரர் அக்கதைகளை உரக்கப் படித்துக் காட்டி வீட்டார் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆனார். இந்நிலையில் பாரதி என்னும் பெயரில் தாகூர் குடும்பத்தில் இருந்து ஒரு திங்கள் இதழ் வரத் தொடங்கியது. அதில் இரவீந்திரரின் பாடல்களும், கதைகளும் வெளிவரலாயின. சோதிரீந்திரர் எழுதிய நாடகமும் அவ்விதழில் வந்தது அந்நாடகத்தை வீட்டில் நடித்துக் காட்டுவது வழக்கம். அதில் தாகூரும்சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.

ஆங்கிலக் கல்வி: தாகூர் தம் பதினேழாம் அகவையில் இங்கிலாத்துக்குச் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில்சேர்ந்தார். பின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார்; ஒன்றரை ஆண்டுகள் பயின்றும் ஒரு துறையிலும் பட்டம் பெறாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். குடும்பத்தினர், தாகூர் சட்டப் படிப்பில் தேறவேண்டும் என