உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

LO

5

விரும்பினர். அதனால் மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார் தாகூர்.கல்கத்தாவிலிருந்து கப்பலில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தம் உடன் வந்த அண்ணன் மகனுக்கு நோய் பற்றிக் கொண்ட மையால் கல்கத்தாவுக்குத் திரும்பினார். அவ்வளவில் தாகூரின் சட்டக் கல்வி நின்று விட்டது.

மாலைப் பாடல்கள்:- இரவீந்திரர் தமக்குக் கிடைத்த பொழுதைக் கலைத்துறையில் செலவிட்டார். புதிய புதிய இசை நயங்களைக் கண்டார். கங்கையின் அழகையும், பெருக்கையும் கண்டு பலப்பல பாக்கள் இயற்றினார். அவை "மாலைப் பாடல்கள்” என்னும் பெயரால் வெளியாயின. அதற்குப் பின் "வங்காள செல்வி" என்னும் புகழ் தாகூருக்கு உண்டாயிற்று. வங்கக் கதை ஆசிரியர் பக்கிம்சந்திரர் ஒரு திருமண வீட்டிற்கு வந்தார். அவரை மணவிழா வீட்டினர் மாலையுடன் வரவேற்றனர். அம்மாலையைத் தம் கழுத்தில் ஏற்காமல் வாங்கி அங்கிருந்த தாகூருக்குச் சூட்டி" இவரே இதற்குத்தக்கவர் என்று பாராட்டினார் இவரின் மாலைப் பாடல்கள் என்ற நூலைப் படித்ததில்லையா? என்று வினாவிப் பெருமைப் படுத்தினார்.

ஊற்றின் எழுச்சி: ஒரு நாட் காலையில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கதிரவன் தோற்றத்தைக் கண்ணுற்றார் தாகூர். மரங்களுக்கு இடையே கதிரவனின் ஒளிக் கதிர் பரவிவந்த காட்சி அவர் உள்ளத்தே ஒரு பெரு மாறுதலை உண்டாக்கிற்று. இவ்வகக் காட்சியால் உலகமே ஒரு புதிய அழகுடன் விளங்கியது.எல்லாப் பொருள்களும் முழு அழகுடனும்,முழு நிறைவுடனும் “கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பாகக்" காட்சி வழங்கியது. வெறுப்பு மிக்க ஒருவனும் தாகூர் பார்வையில் விருப்புமிக்கவனாகத் தோற்றம் அளித்தான். அன்று தோன்றிய உணர்ச்சியைப் பாவாக்கி “ஊற்றின் எழுச்சி" என்று தலைப்புச் சூட்டினார்.

சந்நியாசி:-ஒரு சமயம் மேல் கடலை ஓட்டிய கார்வாருக்குச் சென்றார் தாகூர். கடற் பரப்பும் அதன் காட்சிகளும் அவர்க்கு விருந்தாயின. அங்கிருந்த நாளில் எழுதியவற்றுள் "சந்நியாசி" என்னும் நாடகம் குறிப்பிடத்தக்கது. துறவி ஒருவன் நெடுங்காலம் காட்டில் வாழ்ந்து உள்ளத்தை மிக உறுதிப்படுத்திக் கொண்டான். இனி உள்ளத்தில் அசைவு உண்டாகாது என்னம் எண்ணத்துடன் ஊர்க்குள் போனான். அங்கே வசந்தி என்னும் திக்கற்ற குழந்தையைக்