உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் -29

கண்டான். அக்குழந்தை நெருங்கித் தொடவும் பழகவும் இடம் தந்தான். அதனால் அவன் உள்ளத்தில் பாசம் உண்டாகின்றது. பாசம் உண்டாகக் கூடாது என எண்ணி துறவி வசந்தியை விடுத்து ஓடினான்.வழியில் ஒரு வறிய பெண் தன் தந்தையைக் கூவிக் கொண்டு ஓடுவதைக்கண்ட துறவியின் மனம் மாறுபாடுற்றது. மீண்டுவந்து வசந்தியைத் தேடினான்; பலரையும் வினவினான். வசந்தி இறந்து விட்டாள் என்பதை அறிந்து வருந்தினான். 'அன்பு நெறியே வாழ்வு நெறி' என்பதைச் சந்நியாசி நாடகத்தால் தெளி வாக்கினார் தாகூர்.

முடிவுரை:- குடும்பச் சூழல் இளமையிலேயே பலவகைக் கலைகளை அறிதர்க்கும் பெறுதற்கம் வாய்ப்பாக இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு இசையிலும், நாடகத்திலும், பாட்டு எழுதுவதிலும், கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். உலகம் பாராட்டும் பேறு பெற்றார். "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?"