உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும்

முன்னுரை :

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனிசிறந் தனவே"

எனப் பாடினார் பாரதியார். தாய் மொழிப் பற்றும், தாய் நாட்டுப் பற்றும் ஒவ்வொருவருக்கும் இயல்பானது: இன்றியமையாதது இவ்வகையில் பெரும் புலவர் தாகூர் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்.

தாகூர் உள்ளம்: தாகூர் பேருள்ளம் உடையவர்,சமயத்தின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் பெருக்குவதை வெறுத்தார். அது போலவே ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பகையை வளர்க்கும் நாட்டுப் பற்றையும் வெறுத்தார். நாட்டுக்கு நன்மை தேடுவதில் பிறர்க்கு எவ்வகையிலும் குறையாதவராக விளங்கினார். நாட்டுக்கு கொடுமை உண்டாக்கப்படும் போது வன்மையாகக் கண்டித்தார்.

நாடும் மொழியும்:- தாகூர் நெஞ்சில் உலகம் குடிகொண்டி ருந்தது. உலகவர் அனைவரும் அவர் அன்புக்குரியவர். ஆயினும் அவருடைய எழுத்துக்களில் வங்க நாடு பொலிவாக விளங்கியது. வங்க நாட்டுக் கருப் பொருள் மிக இடம் பெற்றன. வங்க மொழி முன்னேற்றமும் வங்க நாட்டு முன்னேற்றமும் அவர்க்கு உயிர்ப்பு ஆயின.

ஆங்கில மோகம்:- வங்கமக்கட்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த ஆங்கில மோகத்தை அகற்ற அரும்பாடு பட்டார் தாகூர். தாய்மொழி வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டும் என வற்புறத்தினார். பொது மேடைகளில் தாய் மொழியே முழங்க வேண்டும் என்று கூறித் தாமே வழிகாட்டினார். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவுகளையும்