உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

வங்க மொழியிலேயே நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் தேர்ந்தவரான அவரது செயல் நாட்டு மக்களை விழிப்படையத் தூண்டியது.

சிற்றூர் முன்னேற்றம்:- நாட்டின் முன்னேற்றம் சிற்றூர் களிலே அடங்கிக்கிடப்பதை அறிந்தார் தாகூர் சிற்றூர் மக்கள் செல்வர்களையும் ஆட்சியாளர்களையும் நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்பதை அறிந்தார். அந்நிலையைப் போக்குதற்கு முனைந் தார்; கதைகளும் கட்டுரைகளும் எழுதினார்.சிற்றூர் முன்னேற்றத்தில் கற்றோர் ஈடுபடத் தூண்டினார்.

சாந்தி நிகேதனம்:- நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் அடங்கிக்கிடப்பதை நன்கு உணர்ந்தவர் தாகூர். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவது போன்ற பயன்மிக்க செயல் வேறு இல்லை என உணர்ந்தார். தம் இளமைப் பருவத்திலே பள்ளியைச் சிறைச்சாலையாகக் கருதிய நிலையை நினைத்துக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பள்ளிச் சூழ்நிலை யையும் பாடத்திட்டத்தையும் அமைக்க விரும்பினார். குழந்தைகள் ஆடிப்பாடி மகிழவும், இசையும் நாடகமும் கற்கவும், அறிவுப் பசி உண்டாகி ஆர்வத்துடன் கற்கவும் வழிவகை காண விரும்பினார். இத்தகைய எண்ணங்களால் 1901 ஆம் ஆண்டு உருவாகியதே சாந்தி நிகேதனம் என்னும் கலைக்கோவில் ஆகும்.

முடிவுரை: 'வாழ்க' 'ஒழிக' என்று முழங்குவதிலே நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ இருப்பதாகக் கூறிவிட முடியாது, நாடும் மொழியும் நன்மை பெரும் வகையில் எண்ணிப் பார்த்து ஏற்ற தொண்டுகள் செய்வதிலேதான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அடங்கிக் கிடக்கிறது. அத்தகைய அருந்தொண்டு செய்தவருள் தலைமணியாகத் திகழ்பவர் தாகூர். அவரது அயரா உழைப்பால் வையத்தில் வங்க நாட்டுக்கும் வங்க மொழிக்கும் தனிப்பேர் இடம் உண்டாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை.