உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இல் வாழ்க்கை

-

தனி வாழ்க்கையை உலக வாழ்க்கையாக - தன்னல வாழ்வைப் பொதுநல வாழ்வாக மாற்றியமைக்க அமைந்த போற்றத்தக்க அமைப்பே இல்வாழ்வாம். ஒருவர் தம் இல்வாழ்வில் பெறும் அமைதியே அவர் தம் சீர் சிறப்புக்கு அடிப்படையாம். இவ்வகையில் சீரிய இல்வாழ்க்கை எய்தி உலகுக்கு எடுத்துக் காட்டாக இலங்கி யவர் கவிஞர் தாகூர்.

இல்லறம்:- 'அன்பு நெறியே உலகை உய்ப்பது' என்னம் உண்மையைத் தாகூர் கண்கூடாக அறிந்து கொண்ட நாளிலே தான் அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவர் மிருணாளினி தேவியார். அவர்அருங்குணச் செல்வி யராகத் திகழ்ந்தவர். ஆதலால் இல்லறம், அன்புக்கும் அமைதிக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தார்.

இல்லத்தில் கலைப்பணி:- மிருணாளினி தேவியார் கணவர் தம் உள்ளப்பாங்கை நன்கு உணர்ந்தவர். அவர்தம் கலைமேம் பாட்டை நன்கு அறிந்தவர். ஆகவே தம் கடமையில் தவறாமல் கணவர் கலைத் தொண்டுக்குத் துணையாக வாழ்ந்தார். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கலைப்பணி செய்வதற்குத் தாகூர்க்கு வாய்ப்பு ஏற்பட்டது தேவியாரலேயே.

எளிமை வாழ்வு:- தாகூர் எளிமையும் தூய்மையும் விரும்புவர். எந்த ஒன்றிலும் அழகு காணத் துடிப்பவர். ஆடம்பரத்தை வெறுப் பவர். செல்வக் குடியில்பிறந்து வளர்ந்த மிருணாளினி தேவியார். கணவர் குறிக்கோளுக்கு ஒரு சிறிதும் மாறாது நடந்தார். மூட்டை யாகக் கொண்டு வந்த நகைகளை மூட்டையாகக் கட்டி வைத்து எளிமை பூண்டார். அணிகலம் ஆடை இவற்றில் மட்டும் தானா

எளிமை?

இணைந்த எளிமை:- தட்டு முட்டுச் சாமான்களிலும் எளிமை போற்றுவதே தாகூர்க்கு இயல்பு. நிறைய உடைகளை எடுத்துக் கொண்டு வெளியூர்க்குச் செல்ல நேர்ந்தால் 'இரண்டு உடை போதுமே' என்பார். சாந்தி நிகேதனத்தில் பிறரைப் போலவே