உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் -29

தமக்கும் குடிசை அமைத்துக்கொண்டு வாழவும், எளிய உணவே உண்டு வாழவும் தாகூர் முனைந்தார். இவற்றுக் கெல்லாம் மிருணாளினி தேவியார் இணைந்து செல்லும் மனைவியாக இலங்கினார்.

இடை

ஒத்த இல்லறம்:- மிருணாளினி தேவியாரின் சீரிய பண்புகள் தாகூரைக் கவர்ந்தன. ஆதலால் பற்பல கடமைகளுக்கும் டையேயும் சமையல் அறையில் வந்து பொழுது போக்குவார். காய்கறி தின்பண்டம் பற்றியும் உறையாடுவார். மனைவியார் நோயுற்ற காலத்தில் வேறு எவரையும் அவர்க்கு விசிற விடாமல் தாமே விசிறி இன்புற்றார்.

குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளின் மேல் பேரார்வம் உடையவர் தாகூர். அவர்தம் இல்வாழ்வின் பயனாக ஆண்மக்கள் இருவரும், பெண்மக்கள் மூவரும் தோன்றினர். அவர்கட்கு வழிகாட்டுவது மட்மல்லாமல் குளிப்பாட்டுதல், உடுத்தி விடுதல், உறங்கச் செய்தல் ஆகிய கடமைகளிலும் முடிந்த பொழுதுகளில் எல்லாம் பங்கு கொண்டார்.

பேரிடி - தாகூரின் இல்வாழ்க்கை அன்பிலே தொடங்கி அமைதியிலே வளர்ந்து அறத்திலே முதிர்ந்து இன்பமே பொருளாகத் துலங்கியது. அந்த இனிய இல்லறம் தாகூரின் முப்பத்தொன்பதாம் அகவையுடன் நிறைவாயது. தாகூர்க்குக் கிட்டிய பேரிடிகளில் தலைமையானது மிருணாளினி தேவியாரின் மறைவேயாம்.

64

முடிவுரை:- “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றார் திருவள்ளுவர். அதற்கு ஏற்ப அமைந்தது தாகூரின் இல்வாழ்வு. அந்த வாழ்வே வங்கக் கவிஞரை உலகக் கவிஞர் ஆக்கிற்று என்பதில் ஐயமில்லை.