உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொண்டுகள்

-

தனக்கென வாழும் வாழ்வு, பறவை, விலங்குகட்கும் உண்டு. ஆனால், பிறவுயிர்க்கென வாழும் வாழ்வு அவற்றுக்கு இல்லை. பிறர்க்கென வாழும் வாழ்வு கொள்ளாதவர்கள் மனித வடிவில் இருப்பினும் - கற்றத் தேறியவராய் இருப்பினும் மனிதர் ஆகார். அவர் மற்றை உயிர்களைப் போன்றவரே ஆவர். தாகூர் உள்ளம் பேருள்ளம்! நாடு, இன, மொழி கடந்த பேருள்ளம். அவ்வுள்ளம் தொண்டிலே தோய்ந்து நின்ற உள்ளமாம்.

சாந்தி நிகேதனம்- தாகூரின் தலையாய தொண்டு சாந்தி நிகேதனத்தைத் தோற்றுவித்து வளர்த்ததாம். நைவேத்தியம் என்னும் பெயருடன் தாகூர் இயற்றிய நூற் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தந்தையார் அதற்குப் பரிசாகப் பெரும் பொருள் வழங் கினார். அத் தொகையைக் கொண்டு அச்சிட்டு நைவேத்தியத்தை நூலாக்கினார் தாகூர். அதைக் கொண்டு சென்று, ஒரு கலைக் கழகம் நடத்துதற்கு இடந்தந்துதவுமாறு தந்தையாரை வேண்டினார். அதற்கு இசைந்து வேண்டிய வாய்ப்புக்கள் அனைத்தும் செய்து உதவினார். இவ்வகையில் 1901 இல் சாந்தி நிகேதனம் தோன்றியது.

கலைவளர்ச்சி: எளிமையயை செம்மை காணுதற்கென அமைக்கப்பெற்ற கலைக்கழகம் சாந்தி நிகேதனம். இயற்கையுடன் அமைந்த எளிய வாழ்வே இன்ப அமைதியை தரும் என்பதைத் தாகூர் நடைமுறையில் காட்டினார். பள்ளி இசை முழக்கத்துடன் ஒவ்வொருநாளும் தொடங்கும். இசை முழக்கத்துடன் முடியும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றபடி விழாக்கள் கொண்டாடப் பெறும். வாய்த்த பொதுகளில் எல்லாம் நாடகங்கள் நடத்தப் பெறும். நாடகத்தை எழுதிப் பயிற்சி தருவதுடன் நடிப்பிலும் பங்கு கொள்வார் தாகூர்.

கல்விப்பயிற்சி:- இளையவர்கள் இனிய முறையில் கல்விகற்க ஏற்பாடு செய்தார் தாகூர், விளையாட்டின் வழியாகவே கற்க வேண்டியவற்றை விரும்பிக் கற்க வழிவகை கண்டார். அடக்கு