உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

முறை இல்லாமல் சிறைச் சாலை என்னும் எண்ணம் தோன்றாமல் விருப்பத்தோடு மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் கற்றனர். அதே பொழுதில் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக இருக்கவும். அவர்களுக்குள் வரும் தவறுகளை அவர்களே ஆராய்ந்து தீர்க்க வல்லவர்களாக இருக்கவும் வாய்ப்புக்கள் செய்தார். பிறரை மதித்து நடக்கும் பான்மையை நன்குணரப் பயிற்றுவித்தார். இவ்வகையால் நன்மக்களை உருவாக்கி நாட்டுக்குத் தருதலில் சாந்தி நிகேதனம் பெரும் பங்கு கொண்டது.

இடர்ப்பாடுகள்:- சாந்தி நிகேதனத்தை அமைத்து வளர்க்கும் பொறுப்பில் தாகூர்க்குப் பொருள் மிகச் செலவாயிற்று. பொருள் முடை ஏற்பட்டது போதாது என்று மனைவியார், மகள், தந்தை யார், மைந்தன், சிறந்த ஆசிரியர் ஒருவர் ஆகியோர் அடுத்தத்து இறந்தனர். இவ்விழப்புக்கள் தாகூரை வாட்டின. அவர், நாட்டுத் தொழிலும், வாணிகமும் வளரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில அமைப்புகளில் போட்டு வைத்திருந்த பணமும் வரப்பெறாமல் போய் விட்டன. இந்நிலையிலும் தளராமல் அரிய பல பணிகள் புரிந்தார்.

பொதுப்பணிகள்:- 1889இல் கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது தாகூர், நிவேதிகை அம்மையாருடன் ஓய்வின்றி பாடுபட்டு பணம் திரட்டினார். வங்கத்தில் வெள்ளக்கேடும், பஞ்சயத்துயரும் உண்டாக்கிய பொழுதுகளில் எல்லாம் அயராது பாடுபட்டார். பீகாரிலும், குவெட்டாவிலும் நில நடுக்கம் உண்டாக்கிய போது மக்கள் சொல்ல முடியாத் துயரடைந்தனர். அப்பொழுது தாகூர் செயற்கரிய செயல்களை மேற்கொண்டார்.

அரசியல் ஈடுபாடு:- வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க நேர்ந்த போது மக்கள் கொதித்து எழுந்தனர். அவர்கட்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தினார் தாகூர். நாடெல்லாம் சென்று மேடைதோறும் முழங்கினார். வீரப் பாடுக்கள் இயற்றிப் பரப்பினார் ; ஊர்வலம் நடத்தினார்; நிதி திரட்டி உதவினார். "பகை கொள்ளாத ஒத்துழையாமையே" அவர் கருத்தாக இருந்தது மாணவர்கள் இயக்த்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறினார். இந்நெறிப்படி அமைப்புச் செல்லாமையைக் கண்டு அரசியலில் இருந்து விலகிச் சாந்தி நிகேதன அமைதிப் பணியை மேற்கொண்டார் இந்து முகமதியர் வேறுபாட்டைத் தடுக்க எவ்வளவோ அவர் முயன்றார். அது கைகூடாமையால், வங்கம் இரண்டாகப் பிரிந்து பட நேர்ந்தது.