உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

13

கலைத்தொண்டு:- அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர் கலைத் தொண்டில் மிகுதியும் ஈடுபட்டோர், புகழ் வாய்ந்த கீதாஞ்சலியையும், வேறு சில நாடகங்களையும் இப் பொழுதில் இயற்றினார். மாணவர்களை நடிப்பு முதலாய துறைகளில் நன்கு வளர்க்கப் பாடுபட்டார். அவருடைய தொண்டை நாடு அறியத் தொடங்கியது ஒப்பற்ற உலகக் கவிஞராம் தாகூரைப் பலவகை அமைப்புக்களும் வரவேற்கவும் பாராட்டவும் தொடங்கின.

முடிவுரை:- தாகூர் பரந்த பாங்கு படைத்தவர் இளையவர் உள்ளத்தே உண்டாகும் உணர்ச்சிகளே எதிர்கால உலகைக் காக்க வல்லது எனத் தெளிந்து தொண்டாற்றினார். மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவன் உவக்கும் தொண்டு என்பதைச் செயலில் காட்டினார். அவர் தொண்டுள்ளம் வாழ்வதாக.