உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெருவாழ்வு

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்" என்றார் வள்ளுவர். ஆம் உலகத்தில் நிலை பேறானது புகழ்ஒன்றேயாம். நிலைபெறாத உலகத்தில் பிறந்த மக்கள் தம் செயற்களும் செயலால் ஈட்டிய புகழை நிலைக்கச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும், இந்நோக்கத்தை நன்கு நிலையாட்டியவர் தாகூர் என்பதில் ஐயமில்லை.

வெளிநாட்டுப்பயணம்:- தாகூர் தாம் வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலிப் பாக்களைப் பொழுது போக்குப் போலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1912இல் தாகூர் இலண்டனுக்குச் சென்றபோது அம்மொழி பெயர்ப்பையும் எடுத்துச் சென்றார். ஆங்கிருந்த தம் நண்பர் வில்லியம் என்பார்க்குக் காட்டினார். அவர் பாடலின் அருமையை வியந்து பாராட்டியதுடன் தம் நண்பர்கள் பலர்க்கும் காட்டினார். இவ் வகையில், வெல்சு, பெர்னாட்சா, இரசல், பிரிட்சு, ஆண்ட்ரூசு என்பவர்கள் நண்பர் ஆயினர். இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சில பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். தாகூர் பெருங் கவிஞராகவும் சமயத் தலைவராகவும் பேரறிஞர் உள்ளங்களில் டம் பெற்றார்.

உள்நாட்டில் புகழ்:- தாகூர் மேல் நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், அவர் இயற்றிய கீதாஞ்சலிக்கு உலகத்தின் உயர்ந்த பரிசாகிய நோபல் பரிசு கிட்டியது. ஐரோப்பியர் அல்லாத எவரும் அதுவரை அப்பரிசைப் பெற்றது இல்லை தாகூர் அப் பரிசைப் பெற்றது கண்டு, அவரது தாய் நாடான வங்கம் மிகப் பெருமை எய்தியது; தாகூரை அழைத்து விருந்தும் விழாவும் எடுத்தது. பாராட்டுக்கள் நலகியது. பக்கிம் சந்திரர் புகழ்ந்தும் உள்ளவாறு உணரப்பெறாத வங்கம், தங்கள் நாட்டுப் புலவர் மணியை மேல் நாட்டார் பாராட்டிய பின்னரே உணர்ந்து பாராட்டியது "இலக்கணம் அறியாப் புலவர்" என்று பழித்தவர்களும், பாராட்டத் தொடங்கியது தாகூர்க்கு வியப்பாகவே இருந்தது. கல்லூரிப் பட்டம் பெறாத அவரைக்