உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் தாகூர்

15

கல்கத்தாப் பல்கலைக் கழகம் அழைத்து "டாக்டர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பட்டமளிப்புப் விழாப் பேருரை நிகழ்த்த வேண்டிக் கொண்டது.

தாய்மொழிப்பற்று:- தாகூர் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்; உலகத்தைத் தம் குடும்பமாகக் கருதபவர். அதே பொழுதில் தாய் மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் மிக்கவர். வங்க நாட்டினர் வங்க மொழியில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும். கற்க வேண்டும் என்று அவரைப்போல வற்புறுத்தியவர் எவரும் இலர். அதுபோல் தமிழ் மக்கள் தம் தாய் மொழியில்தான் பேச வேண்டும், கற்க வேண்டும். என்று வற்புறுத்தினார் தாகூர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது அவரக்குத் தமிழ்ப்புலவர் ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்புத்தர "குயில் கிளியைப்போல பாட முயலக் கூடாது. குயில் தன் குரலால்தான் கூவ வேண்டும். நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பாடி இருக்க வேண்டும்" என்றார்.

உலக வழிகாட்டி:- மேல்நாட்டு அறிஞர்களுடன் அளவள வாவும் வாய்ப்புக் கிடைத்தது. குறித்துத் தாகூர் மகிழ்ந்தார். அதே பொழுதில் மேலைநாடுகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சியும் நடுங்கியும் வாழும் நிலைமையைக்கண்டு வருந்தினார். ஒரு நாட்டை அழிக்க மற்றொரு நாடு படைகளைப் பெருக்குவதை அறவே வெறுத்தார். போட்டியும் பொருமையும் நாகரிகம் ஆகாது எனக் கண்டித்தார். உலகுக்கு இவ்வகையில் வழிகாட்ட வேண்டியது. இந்தியாவின் கடமை என உணர்ந்து சாந்தி நிகேதனத்தின் வழியாக உலக அமைதிக்குப் பாடுபட முனைந்தார். காந்தி யடிகளை வரவேற்று உலக அமைதிபற்றி ஆராய்ந்தார். வெளி நாட்டு மாணவர்களையும், பெருந்தலைவர்களையும் சாந்தி நிகேதனத்தில் கலந்து உரையாடினார்.

பொதுமை வேட்கை:- சாந்தி நிகேதனத்தில் 1918 ல் விசுவபாரதி என்ற உலகக் கலைக் கழகத்தை அமைத்தார்.ஆண்ட்ரூசு, பியர்சன் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்தி நிகேதனத்தில் தங்கி இருந்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலத்துக் கலைகளும் அங்கு இடம் பெற்றன. சீனா, ஜப்பான் முதலான கீழை நாட்டுக் கலைகளும், ஐரோப்பா முதலிய மேலைநாட்டுக் கலைகளும், ஆங்கு இடம் பெற்றன. கிழக்கு மேற்கு என்று பாராமல் நல்லவற்றை யெல்லாம் கொள்ள வேண்டும் என்பதே தாகூர் கொள்கை. உலகவர் அனைவரும் 'மனிதர்' என்னும் பொதுத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே தாகூரின் உள்ளார்ந்த தொண்டின் அடிப்படை ஆயிற்று.