உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

அஞ்சாமை:- 1916-17 இல் தாகூர் சப்பானுக்குச் சென்றார். அந்நாட்டு கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டு அளவளாவினார். பல கூட்டங்களில் பேசினார். சப்பானியரின் அழகுணர்ச்சியை மதித்துப் போற்றினார் அதே பொழுதில் அரசியல் பகை, மண்ணாசை ஆகியவற்றைக் கண்டித்தார். எவர் தம்மைப் புறக் கணித்தாலும் தமக்கு நேரிது எனத் தோன்றிய கருத்தை அஞ்சாது வெளியிட்டார் தாகூர்.

பட்டம் துறப்பு:- 'டயர்' என்னும் வெறியன் சாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் திரண்ட மக்களைத் தக்க முன்னறி விப்பு இல்லாமல் சுட்டுத் தொலைத்த கொடுமையைக் கண்டித்தார். ஆங்கில அரசால் தமக்குத் தரபெற்ற 'சர்' என்னும் பட்டத்தை உதறினார். நாட்டு முன்னேற்றத்திற்குக் கிராம முன்னேற்றமே அடிப்படை என உணர்ந்து தொண்டாற்றினார். கிராமத் தொண்டர்படை அமைத்தார். தேர்வு முறையால் உண்டாகும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தம் கலைக் கழகத்தில் தேர்வு முறையை ஒழித்துக் கட்டினார். இவ்வாறாக உலகுக்குப் பயன்படும் பெருவாழ்வு கொண்டார் தாகூர்.

முடிவுரை:- "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" என்றார் வள்ளுவர். அதுபோல் பண்பாளராகத் திகழ்ந்த தாகூரால் உலகம் நல்ல பல வாய்ப்புகளை எய்திற்று. தாகூர் புகழ் வாழ்வதாக: