உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

27

நீகிரோ ஒருவனின் உருவச் சிலையைச் சுவைட்சர் தம் இளமையில் ஒரு நினைவுச் சின்னத்தில் கண்டார். அச்சிலையின் தோற்றம் ஆல்பர்ட் உள்ளத்தில் அளவிறந்த இரக்கத்தைத் தோற்று வித்தது. அச்சிற்பத்தை வாய்த்த போதெல்லாம் அடிக்கடி கண்டு கண்டு உருகினார். பின்னாளில் பிணிதீர்க்கும் பெருமகனாராகத் திகழத் தூண்டியவற்றுள் இச் சிற்பம் தலையாயது ஆயிற்று.

ஆல்பர்ட் சுவைட்சர் இளம் பருவத்திலேயே இரக்கமிக்க வராய், எளிமை போற்றுபவராய், இறையன்பு மிக்கவராய் இசைச் தேர்ச்சி பெற்றவராய் இலங்கினார் என்பதைக் கண்டோம். 'விளையும் பயிர் முளையிலேயே" என்பது மெய்யுரை யாயிற்று!

66