உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

29

பெறுவதற்கு உரியவர் ஆக்கின. கோல் உதவித்தொகை என்பது, ஆண்டுக்கு ஏறத்தாழ எண்ணூறு ரூபாய் அளவில் ஆறாண்டு கட்குத் தொடர்ந்து கிடைக்கும் தகுதி உடையதாகும்.

கோல் உதவித் தொகை பெறும் மாணவர் தாம் எடுத்துக் கொண்டபட்டப்படிப்பை ஆறாண்டு கால அளவுக்குள் முடித்தல் வேண்டும்.அப்படிப்பை எப் பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். ஆகாவே இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சுவைட்சர் பாரிசு மாநகர் சென்றார். ஆங்கு சார்லசு விடார் என்பவரிடம் பயின்றார். ஆர்கன் வாசிப்பதிலும் பியானோ மீட்டுவதிலும் மேலும் தேர்ச்சி பெற்றார். கான்ட் என்பரின் தத்துவ நூற் கொள்கைகளை ஆராய்ந்து தம் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். ஆய்வுக் கட்டுரையை வழங்கிப் பட்டம் பெறுவதற்கு முன்னர் இருந்த இடைக்காலத்தில் பெர்லின் நகர்க்குச் சென்று இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுத் தம் திறமையைப் பெருக்கினார்.

தேர்வுக்கு முன்னரே திருக்கோவில் போதகராக நியமிக்கப் பெற்றார். அங்கிருந்தவர் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆனார். ஆகவே, தேர்வு முடிந்த பின்னர் அவ்விடத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்தார். மாலை வேளையில் இவர் செய்து வந்த சமயச் சொற்பொழிவு சிறிது நேரமாக இருந்ததால் அதனை விரிவாக்குமாறு வேண்டினர்; மேலிடத்திலும் மக்கள் குறை கூறினர். அந்நிலையில் தாம் நெடும் பொழுது உரையாற்ற இயலாக் குறையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொண்டு எடுத்துக்கொண்ட மறைநூல் பகுதியை விரித்துரைக் இயலாமல் முடித்துவிடுகிற ஏழைப் போதகர்' என்று தம்மைத் தாமே கூறினார். ஆயினும் தாம் பிறந்த ஆசிரியக் குடும்ப இயல்புக்கு ஏற்பச் சிறந்த ஆசிரியர் விரிவுரை ஆற்று போல் உரையாற்றும் திறத்தை விரைவில் பெற்றார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

சுவைட்சருக்கு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் ரோமன் ரோலண்டுடன் தொடர்பு உண்டாயிற்று. நாடறிந்த உலகறிந்த பெருமக்கள் பலர் உறவும் தொடர்ந்து உண்டாயிற்று. 'செருமன் இலக்கியமும் தத்துவமும்' என்னும் பொருள்பற்றிப் பாரிசு மாநகரில் தொடர்ந்து விரிவுரையாற்றினார். நாகரிகத்தின் தத்துவம்' என்பது பற்றி நூல் எழுதுவதற்குத் திட்டம் வகுத்தார்; குறிப்புக்கள் தொகுத்தார். இந்நிலையில் தாம் கற்ற பல்கலைக் கழகத்திலேயே 'சமய நூல்' பேராசிரியராகும் பேறு பெற்றார்.