உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

பொழுதைப் பொன்னினும் சிறந்ததாகக் கருதி வாழ்ந்தவர் சுவைட்சர். டிராசுபர்க் பல்கலைக் கழகப் பேராசிரியராகிச் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவைட்சர் ஒரு விடுமுறையில் கன்சுபர்க் சென்றார். அவ்வேளையில் ‘யான் தொல்லையோ துயரோ இல்லாமல் வாழும் பேறுபெற்றேன்; இப்பேற்றைப் பிறரும் பெறப் பாடுபடுவதைக் கடனாகக் கொள்வேன்" என்னும் உறுதி பூண்டார். சமயம் தத்துவம் ஆய துறைகளில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் - அதாவது தம் முப்பதாம் அகவை வரை பாடுபடுவதென்றும், அதன் பின்னர் பொதுநலத் தொண்டில் இறங்குவ தென்றும் உறுதி செய்தார். ஆம்! கற்பன கற்றார்; கற்றவாறு நிற்கத் திட்டமிட்டார்! அவர் திட்டம் வாழ்வதாக!!