உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பலதுறைப் பணிகள்

ஒருவர் ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதே அரிது. பல துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக அரிதாகும். பல துறைகளில் தேர்ச்சி பெற்று அவ்வத் துறைகளில் எல்லாம் சிறந்த தொண்டு செய்வது அரிதினும் அரிதாகும். இத்தகைய அரிதினும் அரியதிறம் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர்.

சுவைட்சர் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப் பல்கலைக் கழகச் சமயத் துறைத் தலைமைப் பொறுப்பும் ஏற்றார். இப் பணிக்கு இடையே திருக்கோவில் சமய போதகராகவும் கழ்ந்தார். சமய இயல், தத்துவம் ஆகியனபற்றி அரும்பெரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தினார்.

இப் பணிகளுடன் சுவைட்சர் அமைந்தார் அல்லர். 'பாக்' என்னும் இசைக் கலைஞரைப் பற்றிச் சீரியதோர் ஆராய்ச்சி நூல் இயற்றினார்.பாரிசு மாநகரில் நிறுவப்பெற்ற 'பாக்' இசைக் கழகத்தின் சிறப்பு விழாக்களில் ஆர்கன் வாசிக்கும் பொறுப்பும் ஏற்றார். இத்துணை வழிகளில் இடைவிடாது உழைத்தாலும் தாம் முன்னர்த் திட்டமிட்டுக் கொண்டுள்ளவாறு தம் முப்பதாம் அகவையில் பொதுப் பணியில் முழுமையாக ஈடுபடுவதையே விரும்பினார். எப்பணியைத் தேர்ந்தெடுப்பது? எங்கே தொடங்குவது?

கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தின் விளம்பரத்தாள் ஒன்றைக் கண்டார் சுவைட்சர். அத்தாளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைத்த அருளாளர்கள் உடனே வேண்டும் 'என்னும் வேண்டுகோளைக் கண்டார்.’ தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார்.

சுவைட்சர் தம் இளமையில் கண்டறிந்த நீகிரோவின் சிலை கண்ணெதிரில் காட்சி வழங்கியது. காங்கோ சென்று அங்கே அல்லல்படும் மக்களுக்குத் தொண்டு செய்வதே தக்கது என்னும்