உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

33

எழுதினார். ஆர்கன் இசைக் கருவியில் ஏற்படும் பழுது பார்த்துச் செவ்வை செய்தார். இவ்வாறு பல்வேறு திறம் வாய்ந்த பலபேர்கள் செய்யும் செயற்கரிய செயல்களைத் தம் முப்பதாம் அகவை அளவிலே செய்தார், சுவைட்சர்.

சுவைட்சர் இணையற்ற முயற்சியாளர்; அயராத தொண்டர்; விலையாக்கிக் கொள்ளும் திறம் வாய்ந்தார்; அவர் எடுத்த பணி எதுவாயினும் நிறைவேறத் தவறியது இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட துறை யாதாயினும் ஒளிவிடாமல் போனது இல்லை. அவர்தம் முயற்சியும் தொண்டும் உலகுக்கு நல்வழி காட்டுமாக!